தமிழக அரசின் மண் வள அட்டையினைப் பெற்று விவசாயத்தில் அதிக வருமானம் ஈட்டலாம் என ஆட்சியர் தகவல்


விவசாயிகள் தமிழக அரசின் மண் வள அட்டையினைப் பெற்று விவசாயத் துறையில் அதிக வருமானம் ஈட்டலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

'மண் வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தினை அறிந்து கொள்ளவும், மண்ணில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறிந்து சீர்திருத்த முறைகளை மேற்கொள்ளவும் மண் வள அட்டை பெரிதும் உதவுகின்றது.

ரசாயன உர உபயோகத்தை குறைத்து அதிகளவில் பசுந்தாளுரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கவும் மண் வள அட்டையின் மூலம் பரிந்துரை செய்யப்படுகின்றது.இவ்வாறு தேவைக்கேற்ப அங்கக மற்றும் ரசாயன உரங்களை உபயோகிக்க வழிவகை செய்வதால் சாகுபடி செலவு குறைக்கப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மண்ணில் இடப்படுவது தவிர்க்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகின்றது.

மண் வள அட்டை வழங்கும் திட்டமானது தமிழகத்தில் 2015- 2016-ம் ஆண்டு முதல் செயலாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புவியியல் விவரங்களுடன் கூடிய கட்ட அடிப்படையிலான மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அந்த ஆய்வின் அடிப்படையில் பயிருக்கேற்ற உரப் பரிந்துரையுடன் கூடிய மண் வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

உரச்செலவை குறைத்து, உர விரயத்தை தவிர்த்து, விளை நிலங்களின் மண் வளத்தை பேணுவதில் பெரும் பங்காற்றும் இம்மண் வள அட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்து விவசாயிகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மண் வள அட்டையினை பெற்று, அதனை உபயோகித்து வேளாண்மையில் அதிக மகசூல் பெறலாம்"  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...