மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 30 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி காப்பீட்டு ஊழியர்கள் குற்றச்சாட்டு


மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி அமைப்பினர், பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு கொள்கையை கண்டித்து எல்ஐசி காப்பீட்டு ஊழியர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலக வாளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பில் இது வரை சரியான தீர்வு கிடைக்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது முதல் பெட்ரோல் பங்க், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பழைய நோட்டுகள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தது, ஆனால் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தில் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியது.

இதனால் எல்.ஐ.சி நிறுவனத்தில் உள்ள 30 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...