உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய விவசாயிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.


திருப்பூர்: உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உடுமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் விவசாயிகள் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, உடுமலை பகுதியில் நூல் மற்றும் காகித ஆலைகள் எனத் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயம் மற்றும் நகர வளர்ச்சிக்கும் பெரிதும் துணையாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைந்தது.

அப்போது திமுகவில் சாதிக் பாட்ஷா, கண்ணப்பன் என்ற இரு அமைச்சர்கள் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பின் உடுமலையில் மின் பகிர்மான வட்டம் உருவாக்கப்பட்டு அன்று முதல் தற்போது வரை செயல்பட்டு வருகின்றது.

மின் இணைப்பு வழங்குதல், புதிய திட்டங்களை உருவாக்குதல், மின் கம்பம் தயாரிப்பு, மின் மீட்டர்கள், டிரான்ஸ்பார்ம்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல் என ஏராளமான பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் 49 பிரிவு அலுவலகங்கள் இருந்தாலும், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, தேவனூர்புதூர் என உடுமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே அதிக மின் இணைப்புகள் உள்ளன.

தற்போது பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பிரிவு அலுவலகங்களைப் பிரித்து ஒரு செயற்பொறியாளர் அலுவலகம் கூடுதலாக உருவாக்கவும், கூடுதலாகப் பிரிவு அலுவலகங்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் உடுமலையில் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இருப்பது சரியானதாக இருக்கும்.



ஆனால் தற்போது எந்த விதமான காரணமும் இல்லாமல், சொந்த கட்டிடத்தில் செயல்படும் ஒரு அலுவலகத்தை வாடகை கட்டிடத்திற்கு மாற்றுவது ஏன். உடுமலையிலிருந்து மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மாற்றப்பட்டால் மின்துறை சார்ந்த வளர்ச்சி பாதிப்பதோடு மின் இணைப்புகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்கள் என அனைத்து பணிகளுக்கும் பொள்ளாச்சிக்குச் செல்ல வேண்டும் நிலை ஏற்படும்.

ஆகையால் உடுமலை மின் பகிர்மான வட்டத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...