கோவை அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர் - உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

கோவை சூலூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பாலமுருகன் எனும் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


கோவை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது28), இவர் கடந்த 14ஆம் தேதி சூலூர் காங்கேயம்பாளையம் செக் போஸ்ட், அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சையில் இருந்த பாலமுருகனுக்கு மூளை சாவு ஏற்பட்டது.

அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, மூளை சாவு அடைந்த பாலமுருகனின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக வழங்க மருத்துவமனை நிர்வாகம், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அதன்படி இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க விமான மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல்உறுப்பு தானத்தால், 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...