கோவையில் உள்ள பன்னிமடை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இந்நிகழ்வு இன்று அதிகாலை நடந்தது.
கோவை: கோவை மாவட்டம், பாலக்காடு இடையே பன்னிமடை பகுதியில் இன்று அதிகாலையில் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பகுதியை கடக்கும்போது, ரயில் பாதையை கடந்த கொண்டிருந்த பெண் யானையின் மீது மோதியது.

வனத்துறையினர் தகவல் படி, இந்த பெண் யானைக்கு சுமார் 25 வயதாகும். அவர்கள் தற்போது இந்த சம்பவத்தைக் குறித்து விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இதுபோல் இரண்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.