கோவை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் தற்கொலை முயற்சி - போலீசார் விசாரணை

சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 17 வயது சிறுவன் சோப்பு ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 இளைஞர்கள், 3 சிறார்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.பின்னர் கைதான இளைஞர்கள் 6 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மூன்று சிறார்களும் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.



இந்நிலையில் 17 வயது சிறுவன் ஒருவர் நேற்றிரவு (மே.13) கைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அதிகாரிகள் அச்சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது அந்த சிறுவன் உடல்நிலை தேறி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவனின் தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...