வால்பாறை சாலை பகுதியில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து, பின்னர் வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, செந்நாய்கள் மற்றும் பறவை இனங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் தாக்கம் முடிந்து வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடங்கியுள்ளது.
இதனால் ஆழியார் அணை பகுதிகளில் இருந்த காட்டு யானை கூட்டங்கள் பொள்ளாச்சி வால்பாறை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வருகிறது. இதனால் வனத்துறையினர் இரவில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் வால்பாறை சாலை பகுதியில் நேற்று மே.13 வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது. அப்போது வாகனத்தில் இருந்த பயணி இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.