கோவை மாவட்ட கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கான மூன்றடுக்கு குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடியின் தலைமையில் நடைபெற்று பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.


கோவை: இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன், இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதாசுமன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் ர.பாலமுரளி உட்பட மாவட்ட கல்வி அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்தல் வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மற்றும் பொதுத்தரவில் உள்ள 5,662 குழந்தைகளை கிராமம் வாரியாக பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்களை நேரடியாக அனைத்து துறை அலுவலர்களும் சந்தித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பள்ளிக்கு வரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்விற்கு வருகை புரியாத மாணாக்கர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை எதிர்வரும் துணை தேர்வில் பங்கேற்கச் செய்ய உரிய மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு நடவடிக்கைகளை அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து தொடர்ந்து கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் இடைநிற்றல் அவர்களை சமூகத்திற்கு எதிரான செயல்கள் செய்ய தூண்டும் எனவும் மேலும் போதைப் பொருள் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப அவர்கள் அறிவுறுத்தினார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...