கோவை போத்தனூரை சேர்ந்த முருகேசன் என்ற 51 வயது கூலி தொழிலாளி கடந்த 2020 மார்ச் 21-ஆம் தேதி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்தது.
Coimbatore: கோவையில் போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (51) என்கிற கூலி தொழிலாளி, 2020 மார்ச் 21 அன்று ஒரு வீட்டில் பகுதியில் உள்ள 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி தன் பெற்றோரிடம் இது குறித்து கூறிய பின்னர், சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல அலுவலரிடம் இதை தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை குழந்தைகள் நல உறுப்பினர் ஆஞ்சலின் மூலம் போத்தனூர் போலீசில் புகார் செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேயை கைது செய்தனர். நேற்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரித்த நீதிபதி குலசேகரன், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சம் அளிக்கவும் அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.