மாடித்தோட்டத்திற்கான பற்றாக்குறையற்ற தண்ணீர் சேமிப்பு குறித்து பசுமை தேசம் ராஜேந்திரன் அவர்களின் சில பகிர்வுகள்!


தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பசுமை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளைத் தேடி உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதை பயன்படுத்திக்கொண்ட பல நிறுவனங்கள் மாடித்தோட்டத்திற்கான இடுபொருட்களையும், சில உபகரணங்களையும் சந்தைப்படுத்தி வருகின்றனர்.

இது அனைத்தும் தேவையா என்றால் கிடையாது. நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நம்மாள் மாடித்தோட்டம் அமைக்க முடியும். 

இதுகுறித்து பசுமை தேசம் அமைப்பின் ராஜேந்திரன் நமது நிருபரிடம் கூறியதாவது:-

"முன்னொரு காலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து காய், கனிகளை பகிர்ந்து வந்தனர். அவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் மட்டுமே விவசாயம், செடி வகைகள், காய் அறுவடை செய்வது உள்ளிட்டவை தெரிந்திருந்தது. 

இடைப்பட்ட காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நகர மக்களுக்கு எந்த காய் எவ்வகை தாவரத்தில் இருந்து வருகிறது என தெரியாமல் இருந்தது. அவர்கள் ஒரு கடைக்குச் சென்று இருக்கும் காய்களை அப்படியே வாங்கி வந்தனர். அது, கொடி வகை காயா, செடி வகையா, அல்லது மரத்தில் விளைவிக்கப்படுகிறதா உண்பது à®•ூட அறியாமல் இருந்தனர்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சிறிய அளவிலான விவசாயம் குறித்து விழிப்புணவு பெற்றுள்ளனர். காரணம், விவசாயத்தில் ரசாயன பயன்பாடும், விலைவாசி மாற்றமுமே ஆகும். 

தற்போதுள்ள மக்கள் எவ்வாறு விவசாயம் செய்ய வேண்டும், நல்ல பக்கவிளைவற்ற காய்களை எப்படி விளைவிக்க வேண்டும் என ஆரோக்கியமான உணவு குறித்து அறியத் துவங்கியுள்ளனர். அதன் முதற்படியே மாடித்தோட்டம் ஆகும்.

பெரும்பாலான மக்கள் மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால், அதை எவ்வாறு பராமரிப்பது என்பதில் சற்றே தடுமாறிவிடுகின்றனர்.

இதை பயன்படுத்திக்கொள்ளும் பல நிறுவனத்தினர் வகைவகையாக மண், செடி வளர்ப்புக்கான டப்பா உள்ளிட்ட உபகரணங்களை விற்கத் துவங்கியுள்ளனர்.

ஆனால், மக்கள் அதையெல்லாம் வாங்கித்தான் மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என்பது அவசியமற்றது. வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பைகளும், தேவையற்ற பழைய டப்பா போன்ற பொருட்களுமே இதற்கு போதுமானது. அதில், சிறிய சிறிய துளைகளிட்டு மண் நிரப்பி செடி வைக்கலாம். இதில் பிரச்சணை என்று பின்வாங்கிக்கொள்வதற்கான காரணம் தண்ணீர் தட்டுப்பாடே ஆகும்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி, வெயில் காலங்களில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகள் கருகிவிடுகின்றன என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாடித்தோட்டத்தில் ஏற்படும் இதுபோன்ற வறட்சியினை தடுக்க நம் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் தண்ணீரே போதுமானது. ஆம், வீட்டில் உணவு தயாரிக்கும் முன் காய்கறிகள், அரிசி உள்ளிட்டவற்றை கழுவியப் பின் அந்த தண்ணீரை கீழே ஊற்றி வீணடிக்காமல் அதனை மாடித்தோட்ட செடிக்கு பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு குறையும். உணவு உண்டபின் தட்டினை கழுவி ஊற்றும் தண்ணீரைக் கூட செடிகளுக்கு ஊற்றலாம். அது இயற்கை உரமாகவும் அமையும்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நபர் 35 லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி கீழே ஊற்றுகிறார். அப்படியென்றால் ஒரு குடும்பத்தில் மூன்று நபர் இருப்பின் மொத்தம் நாள் ஒன்றுன்னு 105 லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. அதனை மாடித்தோட்ட செடிகளுக்கு ஊற்றுவதன் மூலம் அவை செழித்து வளரும்.

மாடித்தோட்டத்தில் உள்ள மண்களில் நீர்வறட்சி ஏற்படுவதை தடுக்க மண்ணில் தேங்காய் நாருகளையும் கலந்து பயன்படுத்தலாம். அவை நீரை நீண்ட நேரத்திற்கு மண்ணில் தக்கவைக்கும்.

இவ்வாறாக இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைக்கும் போது பறவைகள், பட்டாம்பூச்சி, தேனீக்கள் உள்ளிட்டவை செடிகளைத் தேடி வரும். அப்போது அங்கு நல்லமுறையிலான சூழல்கள் நிலவும்" என்றார்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...