2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தொகுதியின் வரைபடம் மாறியிருந்தது. சிங்காநல்லூர், கோவை கிழக்கு, கோவை மேற்கு, பேரூர், பல்லடம், திருப்பூர் ஆகிய தொகுதியை உள்ளடக்கிய கோயமுத்தூர் மக்களவை தொகுதி, மறுசீரமைப்பினால் மாற்றம் பெற்றது. அதன்படி கோவை கிழக்கு, மேற்கு, பேரூர், பல்லடம் ஆகிய நீக்கப்பட்டன. கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், பல்லடம் ஆகிய தொகுதிகள் சேர்க்கப்பட்டன.


15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தொகுதியின் வரைபடம் மாறியிருந்தது. சிங்காநல்லூர், கோவை கிழக்கு, கோவை மேற்கு, பேரூர், பல்லடம், திருப்பூர் ஆகிய தொகுதியை உள்ளடக்கிய கோயமுத்தூர் மக்களவை தொகுதி, மறுசீரமைப்பினால் மாற்றம் பெற்றது. அதன்படி கோவை கிழக்கு, மேற்கு, பேரூர், பல்லடம் ஆகிய நீக்கப்பட்டன. கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், பல்லடம் ஆகிய தொகுதிகள் சேர்க்கப்பட்டன. 

இதேபோல பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளும் மாற்றம் பெற்றன. பொள்ளாச்சி மக்களவை தொகுதி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளை கொண்டதாக மாற்றப்பட்டது. அதுவரை தனி தொகுதியாக இருந்த பொள்ளாச்சி பொது தொகுதியாக மாறியது. நீலகிரி தொகுதி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.




15 வது மக்களவை தேர்தல் களம்

காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கடந்த தேர்தலில் இடம்பெற்றிருந்த சில கட்சிகள் விலகியதால், சற்று பலவீனமாக இம்முறை காட்சியளித்தது. அதேபோல பாஜகவின் தேசிய முற்போக்கு கூட்டணியிலும் சில கட்சிகள் விலகியிருந்தன. மூன்றாவது அணியில் அதிமுக, இடதுசாரி கட்சிகள், பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம், மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இருந்தன. 



தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் நீடித்தது. அதிமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணிக்கு இடம்பெயர்ந்தது. 2006 சட்டமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு பிரச்சணையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக, அதிமுக கூட்டணியில் நீடித்தது. அத்தேர்தலில் கூட்டணியில் இருந்த பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை அதிமுக கூட்டணிக்கு வந்திருந்தன.



கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு கவனம் ஈர்த்த தேமுதிக, மீண்டும் தனித்து களமிறங்கியது. தெய்வத்தோடும், மக்களோடும் மட்டுமே கூட்டணி என விஜயகாந்த் தனித்து போட்டியிட்டது. அதேசமயம் தனித்து விடப்பட்ட பாஜக, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டது. 



பாஜக பிரதமர் வேட்பாளராக அத்வாணியை முன்னிறுத்தியது. காங்கிரஸ் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தியது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல் புகார்கள், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை நாடு முழுவதும் தேர்தல் களத்தில் முக்கிய பிரச்சணையாக பார்க்கப்பட்டது. தமிழக தேர்தல் களத்தில் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் நடந்த இனப்படுகொலை ஏதிரொலித்தது. இதற்கு முன்னர் விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த ஜெயலலிதா, தனி தமிழ் ஈழமே தீர்வு என்ற நிலையை எடுத்தார். ஈழத்தமிழர் பிரச்சனையை திமுக கூட்டணிக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தியது, அதிமுக. அதேசமயம் திமுகவின் செயல்பாடுகளும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. 



தேர்தல் முடிவுகள் வந்த போது, கருத்து கணிப்பை பொய்யாக்கி மீண்டும் வென்றது, காங்கிரஸ். கடந்த தேர்தலை விட அதிக இடங்களையும் கைப்பற்றியது. ஈழ பிரச்சணை உச்சத்தில் இருந்த போதும், திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றிருந்தது. ஆனால் அதன் ஏதிரொலியாக காங்கிரசின் முக்கிய தலைவர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரபு, மணிசங்கர் அய்யர், தங்கபாலு போன்றோர் படுதோல்வி அடைந்தனர். இன்னொரு பக்கம் ஈழ பிரச்சணையை தமிழகம் எங்கும் முழங்கிய வைகோ, விருதுநகரில் தோல்வியடைந்தார். மீண்டும் பிரதமராக இரண்டு முறையாக பதவியேற்றார், மன்மோகன் சிங். நெருடல்களை சமாளித்து மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது, திமுக.



கோவை தேர்தல் களம்

கோவை மக்களவை தொகுதியின் வரைபடம் மாறியிருந்தது. கடந்த முறைகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்திருந்தனர். மொத்தம் 25 வேட்பாளர்கள் கோவை மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். திமுக கூட்டணியில் சார்பில் காங்கிரஸ் கட்சியின் பிரபு போட்டியிட்டார். நீலகிரி தொகுதியில் பிரபு போட்டியிடுவது வழக்கம். ஆனால் தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் தனி தொகுதியாக மாற்றப்பட்டதால், கோவையில் முதல் முறையாக போட்டியிட்டார்.



அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிட்டார். தனித்து போட்டியிட்ட தேமுதிக சார்பில் பாண்டியனும், தனித்து விடப்பட்ட பாஜக சார்பில் ஜி.கே.எஸ்.செல்வகுமாரும் களமிறங்கினார். அதேசமயம் தேர்தல் களத்திற்கு புதிதாக ஒரு கட்சி வந்திருந்தது. கவுண்டர்கள் சாதி வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்ட கொங்குநாடு முன்னேற்ற கழகம் முதல் முறையாக தேர்தல் களம் கண்டது. சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டது.



தேர்தல் முடிவுகள் வந்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். 38 ஆயிரத்து 664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அக்கட்சி கோவையில் வெற்றி பெற்றது. கோவை தொகுதி வரைபடம் மாறியிருந்தாலும், மக்கள் மாறாமல் மீண்டும் இடதுசாரிகளையே தேர்வு செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் பிரபு இரண்டாம் இடத்தையும், கொங்குநாடு முன்னேற்ற கழகம் மூன்றாம் இடத்தையும், தேமுதிக நான்காம் இடத்தையும் பிடிக்க பாஜக ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

கொங்கு மாநிலம் கேட்ட கட்சி

கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டார், இ.ஆர்.ஈசுவரன். ஆச்சரியமளிக்கும் வகையில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று 15.54 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்து கவனம் ஈர்த்தார். பொள்ளாச்சியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் பெஸ்ட் ராமசாமி ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 834 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இதேபோல போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று ஆச்சரியமளித்தனர். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தேமுதிக மூன்றாம் இடம் பிடித்தாலும், மேற்கு மண்டலத்தில் தேமுதிகவை பின்னுக்கு தள்ளி கொமுக மூன்றாம் இடம் பிடித்தது.



கொமுக கட்சி அடுத்தடுத்து பல கூறுகளாக உடைந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற தனிக்கட்சி துவங்கினார். ஜி.கே.நாகராஜ் கொங்குநாடு ஜனநாயக கட்சி என்ற தனிக்கட்சி துவக்கி பின்னர், பாஜகவில் ஐக்கியமானர். அதன்பின் வந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து விடப்பட்ட அக்கட்சி ஒரு கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டது. அது ’கொங்கு மாநில பிரிவினை’. கொங்குநாடு புறக்கணிக்கப்படுகிறது என்பதால் மேற்கு மண்டலத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டுமென கோரியது. 

இது ஒரு புறமிருக்க, அடுத்து வந்த மக்களவை தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் அதிமுக கடைபிடிக்கும் வழக்கமான யுக்தியை கைவிட்டது. முதல் முறையாக அதிமுக களமிறங்கி ஆச்சரியமளித்தது. அதேசமயம் நாடு முழுவதும் வீசிய மோடி அலையை கோவையில் கவிழ்த்தது பாஜகவின் உள்ளடி வேலை.

தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...