2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போட்டியிட்டதும், வெற்றி பெற்றதும் ஒரே ஒரு முறை தான். என்றால், நம்புவது கடினம் தான். ஆனால் அதுவே உண்மை. ஏனெனில் கோவை மாவட்டம் என்பது அதிமுகவின் கோட்டையாக அறியப்படுகிறது. அதிமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரை கோவையே தேர்வு செய்தது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக கோயம்புத்தூர் மக்களவை தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதே வழக்கம். எம்.ஜி.ஆர் கடைபிடித்த அப்பாணியை, ஜெயலலிதாவும் பின்பற்றினார். அதனை 16 வது மக்களவை தேர்தல் மாற்றியமைத்தது.


கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போட்டியிட்டதும், வெற்றி பெற்றதும் ஒரே ஒரு முறை தான். என்றால், நம்புவது கடினம் தான். ஆனால் அதுவே உண்மை. ஏனெனில் கோவை மாவட்டம் என்பது அதிமுகவின் கோட்டையாக அறியப்படுகிறது. அதிமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரை கோவையே தேர்வு செய்தது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக கோயம்புத்தூர் மக்களவை தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதே வழக்கம். எம்.ஜி.ஆர் கடைபிடித்த அப்பாணியை, ஜெயலலிதாவும் பின்பற்றினார். அதனை 16 வது மக்களவை தேர்தல் மாற்றியமைத்தது.

காங்கிரஸ் எதிர்ப்பலை

பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீது மக்களிடம் அதிருப்தி நிலவியது. ஆதர்ஷ், காமன்வெல்த், நிலக்கரி, ஐபிஎல், ஹெலிகாப்டர் என அடுத்தடுத்து ஊழல் புகார்கள் அடுக்கப்பட்டன. ஆனால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்தது. மத்திய அமைச்சர் ஆ.ராஜா சிறை சென்றார். கலைஞர் டிவிக்கு பண பரிவர்த்தனை வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட, காங்கிரஸ், திமுக ஊழல் கட்சிகளாக மக்கள் மனதில் பதிந்தது. 



அடுக்கடுக்கான ஊழல்களால் இந்தியாவையே உலுக்கி கொண்டிருந்தது. அப்போது ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார், அன்னா ஹாசரே. நாடு முழுவதும் உருவான ஆதரவு அலையை பயன்படுத்தி, தேர்தல் களமிறங்க விரும்பினார், அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் அன்னா ஹாசரே தயக்கம் காட்டவே, அங்கிருந்து விலகி ’ஆம் ஆத்மி’ என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கினார். ஊழல் எதிர்ப்பை என்பதை அடிப்படையாக கொண்டு அக்கட்சியும் தேர்தல் போட்டியிட்டது. காங்கிரஸ் எதிர்ப்பலை நாடு முழுவதும் வீச, முக்கிய கூட்டணி கட்சிகளையும் இழந்து காங்கிரஸ் பலவீனமாக காட்சியளித்தது.



கட்டமைக்கப்பட்ட மோடி பிம்பம்

2009 நாடாளுமன்ற தேர்தலில் அத்வாணியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்து, படுதோல்வி அடைந்தது. மதவாதத்தை மட்டும் முன்னிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து, வளர்ச்சி என்ற யுக்தியை கையில் எடுத்தது. பாஜகவிற்கான வலுவான அடித்தளம், மத ரீதியான அணிதிரட்டல் ஆகியவற்றினால் குஜராத்தினால் தொடர் வெற்றிகளை பெற்றார், நரேந்திரமோடி. குஜராத் வளர்ச்சியடைந்துள்ளது, குஜராத் முன்னேறியுள்ளது, சிறப்பான ஆட்சி நடக்கிறது என பாஜக விளம்பரம் செய்தது. குஜராத் கலவரத்தினால் சர்ச்சை நாயகனாக அறியப்பட்ட மோடியை, வளர்ச்சி நாயகன் என்ற பிம்பத்தை நாடு முழுவதும் கட்டமைக்க முயன்றது. அத்வாணி ஒரங்கட்டப்பட்டு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், நரேந்திர மோடி.



மோடியால் மட்டுமே நாட்டை மீட்க முடியும் என்ற பாஜகவினர், அனைத்து பிரச்சணைகளுக்கு சர்வ யோக நிவாரணியாக மோடியை முன்னிறுத்தினர். சமூக வலைதளங்களில் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் பெரும் உதவி புரிந்தது. ஆனால் பாஜக சொல்லும் குஜராத் வளர்ச்சி மற்றும் புள்ளி விபரங்கள் தவறானவை, மோசடியானவை என்றன, எதிர்கட்சிகள்

29 கட்சிகளை கொண்ட வலுவாக கூட்டணியையும் கட்டமைத்தது. ஊடகங்கள் மோடி அலை வீசுவதாக தொடர்ந்து சொல்லி வந்தன. காங்கிரஸ், பாஜகவிற்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகளும் கைகூடவில்லை.

தமிழக தேர்தல் களம்

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து திமுக கைகழுவியிருந்தது. விசிக, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டது. தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்கும் திமுகவின் முயற்சியும் வெற்றி பெறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆபார வெற்றி பெற்ற அதிமுக, நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து களம் காண முனைந்தது. “நாளை நமதே, நாற்பதும் நமதே” என ஒங்கு ஒலித்த அதிமுகவினர், நாற்பது தொகுதியிலும் வென்றால் நாளைய பிரதமர் ஜெயலலிதா என்றனர். 



தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றான அணியை அமைத்தது பாஜக. நாட்டில் மோடி அலை வீசுவதாக சொன்ன மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல் நபராக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். பாமக, தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து கூட்டணியில் சேர்ந்தன. தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டது. இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை சேர்ந்து போட்டியிட்டன.



மோடி, லேடி, டாடி

தேர்தல் களத்தில் அனல் பறந்தது. குஜராத்தை விட தமிழகம் பல்வேறு துறைகளிலும் வளர்ந்த மாநிலமென சொன்ன ஜெயலலிதா, புள்ளி விபரங்களோடு பட்டியலிட்டு காட்டினார். “இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடி அல்ல, இந்த லேடி தான்” என்றார் ஜெயலலிதா. இதற்கு பதிலடியாக ”சிறந்த நிர்வாகி மோடியும் அல்ல, லேடியும் அல்ல, எங்கள் டாடி (கருணாநிதி) தான்” என்றார், திமுக பொருளாளர் ஸ்டாலின்.



கருத்து கணிப்புகள் சொன்னதை விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கையில் துவக்கத்தில் இருந்தே வெற்றி முகத்தில் இருந்த பாஜக, தனி பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றது. பாஜகவின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி. இது மோடியின் வெற்றி என்றது, பாஜக. ஆனால் அந்த சில மாநிலங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவை தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ஒடிசா.

அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கடந்த சில தேர்தல்களில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த இடதுசாரிகள் பத்து இடங்களுக்குள் சுருங்கி போயினர். 

தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரால் கூட எட்ட முடியாத சாதனையை ஜெயலலிதா எட்டினார். போட்டியிட்ட அத்தனை தொகுதியிலும் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. நூறு சதவீத தோல்வி. ஆனால் கன்னியாகுமரியில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், தர்மபுரியில் பாமகவின் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். திமுக பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட, இரண்டாம் இடத்தை பாஜக கூட்டணி பிடித்தது.



மோடி அலையை கவிழ்த்த உள்ளடி

தனித்து போட்டியிட்ட அதிமுக, முதல் முறையாக கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் நேரடியாக போட்டியிட்டது. வேட்பாளராக வழக்கறிஞராக இருந்த ஏ.பி.நாகராஜ் நிறுத்தப்பட்டார். அதற்கு போட்டியாக திமுகவும் வழக்கறிஞரான கனேஷ்குமாரை களமிறங்கியது. இடதுசாரிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ஆர்.நடராஜனும், காங்கிரஸ் சார்பில் பிரபும் போட்டியிட்டனர். ஆனால் கோயம்புத்தூர் தொகுதி பாஜகவிற்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை வென்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அங்கு தான் சிக்கலும் ஏற்பட்டது.



கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவை பக்கம் சி.பி.ராதாகிருஷ்ணன் எட்டி பார்க்கவில்லை. கட்சி பணிகளிலும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக ஜி.கே.எஸ்.செல்வகுமார்க்கு வாய்ப்பளிக்க வேண்டுமென பாஜக அலுவலகத்தில் போராட்டங்கள் நடந்தன. இருப்பினும் தலைமையில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சமாளித்தார். 

மோடி அலை, காங்கிரஸ் எதிர்ப்பலை, தொழில் துறை ஆதரவு, கணிசமான வாக்குவங்கி, கூட்டணி பலம் என இருந்த பாஜகவே வெல்லுமென்ற தேர்தல் கருத்து கணிப்புகள் பொய்யாகின. உபயம், உட்கட்சி பூசல். பாஜக வலுவாக இருந்த பல பகுதிகளிலும் உள்ளடி வேலையினால் பின் தங்கியது. மோடி அலை கோவையில் கவிழ உள்ளடி வேலையே காரணமென சொல்லப்பட்டது.

அதிமுக வேட்பாளர் ஏ.பி.நாகராஜ் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடம் பிடிக்க, திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் நான்காம் இடத்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஐந்தாம் இடத்தையும் பிடித்தன.



ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் கட்சிகள் மாறியிருக்கின்றன. கோயம்புத்தூர் தொகுதியை திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மோதுகின்றன. வெல்லப்போவது யார்??...

தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...