குழந்தைகளை சிறந்த ஜிம்னாஸ்டிக்காக பயிற்றுவிக்கும் லிட்டில் ஜீப்ரா

ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளின் தாய் என்பதும் இதனால் மனதில் ஒருவித மாற்றம் ஏற்படும் என்பது பலரும் அறிந்த விஷயம். தலை கீழாய் தொங்குவது, உடலை ரப்பராய் வளைப்பது, அந்தரத்தில் பறப்பது ஆகியவை தான், இந்த விளையாட்டின் சிறப்புகள். உச்சி முதல் பாதம் வரை, ஒவ்வொரு உறுப்பும் துடிப்புடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதற்கான பயிற்சி, இந்த விளையாட்டின் மூலம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



லிட்டில் ஜீப்ரா சிறுவர்களுக்கான பள்ளியில் பயிலும் ஒவ்வொரு குழந்தைகளும் இந்த ஜிம்னாஸ்டிக்-யில் தற்போது சிறப்பு பெற்று வருகின்றனர். இப்பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியர்களும் சிறுவர், சிறுமியர் மீது தனி கவணம் செலுத்தி பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். 



மேலும், இப்பள்ளியில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, இசை, ஒலி ஒளி கல்வி, விளையாட்டு என அனைத்து விதமான பயிற்சிகளும் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிறது. இதில், வியக்கத்தக்க விசயமே ஒவ்வொரு குழந்தைகளும் தானாக முன்வந்து அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்படுவதே ஆகும் என மகிழ்ச்சிகொள்கிறார் இதன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் அனுஷா.



ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு ஏற்றவாறு லிட்டில் ஜீப்ராலின் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. எனது குழந்தைக்கு ஜிம்னாஸ்டிக் கற்றுத்தர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், கோவையில் எங்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சிப் பள்ளி உள்ளது என தெரியவில்லை. அதனால், எனது சொந்த முயற்சியில் ஜிம்னாஸ்டிக்-கிற்கு சிறப்பாக ஒரு பள்ளியினை துவங்கினேன். இங்கு 3.5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படும். இப்பள்ளியில் பயிற்சியாளராக இருப்பவர் கொல்கத்தாவைச் சேர்ந்த தேசிய அளவில் 7 வருடம் அனுபவமிக்கவர்.



மேலும், லிட்டில் ஜீப்ரா பள்ளியின் சார்பில் பிற பள்ளி குழந்தைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. உங்களது குழந்தைகள் அதிகப்படியாக விளையாடினாலோ, சுவற்றில் ஏறினாலோ, தாவிக் குதித்தாலோ அவர்களை கண்டிக்காதீர்கள். தகுந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் திறனை மேம்படுத்தி சிறந்த வீரர்களாக்க முடியும்" என்றார் அனுஷா.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...