கோவையில் 47 வருட மரபுமிக்க 'மொரு மொரு பக்கோடா'


அந்தி மாலைப் பொழுது சாயும் நேரம், நண்பர்களுடன் உரையாடும் நேரம், இனிமையான பொழுதை கழிக்கின்ற நேரம் அனைவரும் எதிர்பார்ப்பது சூடான தேனீரும், சுவையான சிற்றுண்டியுமே. இனிமையான மாலைப் பொழுதில் தேனீரும், சுட சுட பக்கோடாவும் யாரும் மறுப்பு தெரிவிக்காத சிறந்த உணவாகும்.

கோவையில் அதற்கான சிறப்புமிக்க இடம் கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை மதுக்கரையில் அமைந்துள்ள பக்கோடா கடையே ஆகும். 

47 வருட பாரம்பரியமிக்க மணி விலாஸ் அப்பகுதிக்கே புகழ்மிக்க கடையாக திகழ்ந்து வருகிறது. கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த சாமி குட்டி பிள்ளை என்பவரால் கடந்த 1970 ஆம் வருடம் நிறுவப்பட்டதே இந்த மணி சிற்றுண்டிக் கடை. இங்கு, காலை, மதியம், இரவு என அனைத்து நேரங்களிலும் உணவுகள் கிடைக்கப்பெற்றாலும் மாலை நேரத்தில் சுடசுட விற்கப்படும் பக்கோடா-வே இக்கடையின் சிறப்பு. இதனை உண்பதற்காகவே அப்பகுதி மக்கள் கூட்டமாய் திரள்வது வழக்கம்.

சாமி குட்டி பிள்ளை-யினை அடுத்து இந்தக் கடையினை 57 வயதில் தன் கட்டுப்பாட்டில் 1998 ஆம் ஆண்டு கொண்டு வந்தார் அவரது மகன் எஸ்.மணி. இதில், தன் தந்தையின் சுமைமிக்க பக்கோடாவின் செய்முறையை போன்றே மணியும் செயல்படுத்தி வந்தார். 

மிருதுவான, வெங்காயம் நிறைந்த இக்கடையின் பக்கோடாவை உண்பதற்காக அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அந்த சாலை வழியாக செல்லும் பிற பகுதி மக்களும் சற்று ஓய்வெடுக்க மணியின் கடையில் தஞ்சமடைவது வழக்கம். அதிலும், பக்கோடாவுடன் தக்காளி, மிளகாய் சேர்த்து அரைத்த சட்னி சுவையின் உச்சமாகவே திகழ்கிறது.

மணியுடன் அவரது மனைவியும் இணைந்து இக்கடையினை வழிநடத்தி வருகின்றார். மேலும், அக்கடைக்கு தங்களது மகன் பிரசாந்த்-யின் பெயரைச் சூட்டி தற்போது பிரசாந்த் விலாஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். இங்கிருந்து அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கும் தேனீர், பக்கோடா விநியோகிக்கப்படுகிறது.



இதுகுறித்து மணி கூறுகையில், முன்னொரு காலத்தில் மதுக்கரை பகுதிக்கே சிறப்புமிக்க கடையாக எங்களது பக்கோடா கடை திகழ்ந்து வந்தது. ஆனால், தற்போது இந்த சாலையில் ஏராளமான பேக்கரிகள், சிற்றுண்டி கடைகள் நிறுவப்பட்டுள்ளதால் இக்கடைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இருப்பினும் முதியவர்கள், பாரம்பரியமிக்க நபர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்" என்றார்.

சாமி குட்டி பிள்ளை பக்கோடா கடையின் சுவைமிக்க பக்கோடாவினை சுவைத்த எவரும் மாற்று இடத்தில் மாலை பொழுதை இனிமையாக கழிக்க முடியாது என்பதே இந்த கடையின் புகழாக அமைகிறது.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...