மதிய உணவில் மாற்றத்தை தேடுபவரா நீங்கள் ? அப்ப உங்களுக்கான இடம் கோவை "லட்சுமி சங்கர்" உணவகம்


காலை உணவை கடமைக்காக அள்ளிப் போட்டுக்கொண்டு, பணியிடங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் தலைதெறிக்க ஓடுபவர்கள் நம் நகரவாசிகள். அவ்வாறு பணியில் ஈடுபட்டு மதியம் வயிறார சாப்பிடப் போகிறோம் எனக் கிளம்புகிற இவர்களின் மதிய உணவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே அனைவரது மத்தியிலும் எழுந்து நிற்கும் மிகப் பெரிய கேள்வியாகும்.

கோவையில், அதுபோன்று பணிச்சூழலில் சிக்கித் தவிக்கும் மக்களின் மதிய உணவிற்காகவே ஆரோக்கியமான உணவுகளை வழங்க உதயமாகியுள்ளது லட்சுமி சங்கர் உணவகம். சாய்பாபா காலனி, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் நுழையும் போதே ஒருவித நறுமணங்களுடன் மனதை மயக்கும் வகையில் வரவேற்கிறது லட்சுமி சங்கர். 



சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் மதிய வேலையில் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சாதா உணவு, இயற்கை உணவுகள் என்பதே அவை. இதில், சாதா உணவில் வழக்கமான அரிசி, சாம்பார், பொறியல் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இயற்கை உணவுகள் பட்டியலில் கைகுத்தல் அரிசி, காய்கறிகள் நிறைந்த சாம்பார், காய்களின் கலவை, கீரை, மோர் என முழுக்க முழுக்க இயற்கையான, ஆரோக்கியமான உணவுகள் பரிமாறப்படுகின்றன.



மேலும், இங்கு பரிமாறப்படும் உணவுகளின் காய்கறிகள், கீரைகள் அனைத்தையும் சந்தையில் வாங்குவதைத் தவிர்த்து விட்டிலேயே விளைவிக்கின்றனர். இவை ரசாயனம் அற்றதாகவும், இயற்கையாகவும் உள்ளன. குறிப்பாக, சாம்பார் உள்ளிட்டவற்றில் மசாலா குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.



இதுகுறித்து, கோவை லட்சுமி சங்கர் உணவகத்தின் உரிமையாளர் மணிசங்கர் கூறியதாவது:-

எனது தந்தை கோமதி சங்கர் என்பவரால் 40 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் இயற்கை உணவு சார்ந்த உணவகம் நிறுவப்பட்டது. சில வருடங்களுக்கு பிறகு அதனை நான் வழிநடத்தி வந்தேன். பின் கோவையில் சாய்பாபா காலனி மற்றும் பிளமேட்டில் லட்சுமி சங்கர் என்ற பெயரில் உணவகத்தை நிறுவினேன். 

இங்குள்ள மக்கள் தங்களின் பணிச்சூழல் காரணமாகவும், நேரமின்மை உள்ளிட்டவற்றால் ஆரோக்கியமற்ற, துரித உணவுகளை உண்டு வருகின்றனர். சிலர் மதிய உணவு உண்பதே குறைவு. அவர்களின் நலன் கருதி நிறுவப்பட்டதே இந்த இயற்கை முறைசாந்த உணவகம். 

எங்களது உணவகத்தில் முழுக்க முழுக்க மைதா மாவு தவிர்க்கப்பட்டுள்ளது. மதிய உணவிற்கு கைகுத்தல் அரிசி சாதம், சாம்பார், ரசம், மோர் குளம்பு, கீரை, பொறியல், பச்சை காய்கறி கலவை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது. இதனுடன், பாயாசமும் வழங்கப்படுகிறது. இதில் நாங்கள் சாதாரண சர்க்கரையை தவிர்த்து கரும்பு சர்க்கரையை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். மேலும், தினசரியும் ஒரு காய்கறிகள் சூப்பையும் உணவுடன் வழங்கி வருகிறோம்.

இரவு உணவிற்கு சோளம், கம்பு உள்ளிட்ட சிறு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தோசை, சேவை, இட்லி உள்ளிட்டவற்றை விநியோகிக்கிறோம். இதில், பிரபலமான இரவு உணவு கீரை தோசை ஆகும். பெரும்பாலானோர் கீரை தேசையினை விரும்பி உண்பர்" என்றார்.



காலத்துக்கு ஏற்ப மனிதனின் உணவு முறையும் வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பாக மெட்ரோ சிட்டிகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. ஊட்டச்சத்து இன்றி, ரசாயனக் கலவை உணவுகளையும், துரித உணவுகளையும் உட்கொண்டதே இதுபோன்ற பாதிப்புகளுக்குக் காரணம் என்ற விழிப்புணர்வு சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனால் இயற்கை உணவுகளை தேடித் தேடி வாங்கி சாப்பிடும் மனநிலை தற்போது உருவாகியுள்ளது. அவ்வாறு இயற்கை உணவைத் தேடுவோருக்கு கோவையின் லட்சுமி சங்கர் உணவகம் சிறந்த மாற்றமாக அமையும்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...