சமத்துவத்திற்கான ஒரு மதம்- ஜெய்னிஷம்


நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகம் பல்வேறு பிரச்சனைகள், போர், உயிர்பலி, இளைஞர்களுக்கு மன அழுத்தம், உயிர் வாழ போராடும் மதங்கள், காமம், பேராசை மற்றும் ஆசை ஆகியவற்றால் நிறைந்து காணப்படுகிறது.

இதைப் பற்றி நாம் ஆழமாக சிந்தித்துபார்த்தால், மதம் என்னும் கோட்பாட்டை நாம் தவறாக வழிநடத்தியதே அல்லது அதன் மீதான ஒருவித அதிகப்படியான ஈடுபாடு, வெறுப்பு உள்ளிட்ட காரணங்கள் உலாவுகின்றன.

இதற்கான பதில் நிறைவுவரை கிடைக்காது என்பதும் நாம் அறிந்ததே. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் நடைமுறையில் சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் சமாதானத்தை வளர்க்கும் நோக்குடன் எமது மதத்தை வலுப்படுத்த எமக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது? என்று நாம் சிறிதும் சிந்திப்து இல்லை.



வாழ்கையின் கொள்கையை கடைப்பிடித்து வாழ்கின்றன ஒரு மதம் ஜெய்னிஷம். கோவையில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ள ஜெய்னிஷம், சமாதான சகவாழ்வு அல்லது "அனெகன்ட் வாட்" என்ற நம்பிக்கையை பரப்புகின்றது.

"மதம் சமாதான இணை உறவு என நம்புகிறது, அதன் கருத்துக்கள் பல புள்ளிகளாக இருந்தாலும் எங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளது. ஒவ்வொரு மனிதரும் எந்த சமூகத்தை சேர்ந்தவர், அல்லது உலகின் எந்த பகுதியைச் சேர்ந்தவர் மற்றவர்களின் பார்வையில் வேறுபடுகிறது. அதை மீறிய சொந்த அடையாளம் என்பது நிலைக்கிறது.



ஆன்மீகத்தினை நாம் நடைமுறையில் கடைபிடிக்கும் போது நாம் பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிந்துணர்வு, பரஸ்பர பகிர்வு மற்றும் அக்கறை ஆகியவற்றை வளர்த்துக் கொள்கிறோம். இந்த நடைமுறையானது மனதையும் ஆன்மாவையும் நிர்மூலமாக்குகிறது" என்கிறார் கோவை ஜெயின் கோவிலில் தற்போது தங்கி இருக்கும் சத்வி சியாம்புர்ணா ஸ்ரீ.

ஜெயின் துறவியின்படி, எதிர்பார்ப்புகள் அனைத்து துயரங்களுக்கும் காரணமாகின்றன. ஒருவர் விருப்பமில்லாமல் இருக்க விரும்பும் பாதையை பின்பற்ற வேண்டும். அப்போது தான் சமாதானத்தை அடைந்து, பரிமானமாக, தெய்வீகத்தன்மையுடன் இருக்க முடியும்.

தற்பொழுது ஜெயினியர்கள் "சதுர்மாஸ்" மத பண்டிகை கொண்டாடுகின்றனர். இந்த சமயத்தில் ஜெயின் மதத்தின் கொள்கைகளை பரப்புவதற்காக துறவிகள் பல்வேறு இடங்களில் தங்களது பணிகளை தொடர்கின்றனர். 



"நாட்டில் பல சமூகங்களுடன் சமாதானமாக இணைந்திருக்கும் ஒரு சிறு சமூகமாக இருப்பினும், மற்றவர்களுடன் வாழ்க்கையை தொடரும் போது இச்சமூகத்தின் இன்னல்கள் குறித்து மேலும் அறிந்துகொள்கிறோம் என்கிறார் ஜெயின் சமூகத்தின் குறிப்பிடத்தக்க உறுப்பினரான சம்பலால் பஃனா. மேலும் அவர் கூறுகையில், நான் முதலில் ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்தேன். கடந்த 65 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூகங்களுடன், மிகவும் அமைதியான சகவாழ்க்கையை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.



வாழ்க்கையின் அனைத்து நோக்கமும் தூய ஆத்மாவாக உருமாற வேண்டும், தெய்வீகத்தோடு ஒன்றுகூடுவதன் மூலம் உயிர்வாழ்வது, பேராசை மற்றும் கௌரவம் ஆகியவற்றை கைவிட்டு நம் வாழ்வை, எண்ணத்தை பலப்படுத்துவது ஆகும்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...