உங்கள் தோலைப் பிரகாசிக்கச் செய்யுங்கள்- மருத்துவர் சேது ராமன்


நம் அனைவரிடத்திலும் மருத்துவர் குறித்தான பொதுவான கருத்து ஒரு மருத்துவர் நடுநிலையான வயதுடன், வெளுத்தநிறம் கொண்ட முடியுடன், எப்போதும் கடுமையான அல்லது கூறிய பார்வையுடன் இருப்பவர் என்பதுதான். ஆனால், அந்த கூற்றுக்கள் அனைத்தையும் பொய்யாக்கியுள்ளார் மருத்துவர் சேது ராமன். மேலும், அவரது சமகால தோற்றம் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு அணுகுமுறையுடன் அவற்றின் நோயாளிகளுக்கு சிறந்த தோற்றத்தை அளிப்பதற்காக அவர்களின் தோல் மற்றும் முடிகளை பராமரிக்க சிறந்த ஆலோசனை வழங்கி வருகிறார்.

சென்னையில் ZI என்னும் பெயரில் செயல்பட்டு வரும் இவரது கிளீனிக் விரைவில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் கோவையிலும் தொடங்கப்படவுள்ளது.



அழகு மற்றும் தோல் பராமரிப்பு குறித்து மருத்துவர் சேது கூறியதாவது:-

தினமும் புதிய மேம்பட்ட தோல் பராமரிப்பு சிகிச்சைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆனால் நமக்கு எது சிறந்தது என்பதை நாம் எப்படி உணர்கிறோம்?

நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பது பொருத்தே உங்களது தோலின் பராமரிப்பும் அடங்கியுள்ளது. நம்மில் ஒவ்வொருவரும் அழகிய முகத்துடன் பிறக்கப்பட்டுள்ளோம். இந்த நகரத்தில் எங்கும் காணப்படும் அழகு நிலையங்களைப் போல் அல்லாமல் எங்களது சிகிச்சை ஒவ்வொருவரின் வேறுபட்ட தேவைகளை புர்த்தி செய்யும் வகையில் இருக்கும். எனவே எந்த தோல் சிகிச்சையையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், ஒரு அழகு நிலையத்தை விட ஒரு தோல் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும் அல்லது உங்கள் சருமத்தினை தொடர்ந்து ஒரேமாதிரியாக பராமரிப்பது மிகவும் முக்கியம். எவ்வித சிகிச்சைக்கு முன்பும் உங்கள் தோலின் தன்மையை புரிந்து கொள்ளுங்கள்.

சந்தையில் உங்களது தோலை பராமரிப்பதற்கு என புதிது புதிதாக பல்வேறு கிரீம்கள் உள்ளன. ஆனால் அதைப் பயன்படுத்தினால் உண்மையில் உரிய தீர்வு கிடைக்கிறதா?

நீங்கள் சரியான கிரீம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், உங்கள் தோலின் தன்மை குறித்து அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் சில கிரீம்-யில் உள்ள குறைபாடுகள் அல்லது நிறமி, கோஜிக் அமிலம் போன்றவை உங்களது தோலின் தன்மையை சீர்குழைத்து விடும்.

தவறாக ஒரு கிரீமினை முயற்சி செய்வதை விட எப்போதும் ஒரு சன்ஸ்கிரீன் தயாரிப்புகளை பயன்படுத்தலாம். அது உங்களது தோலினை பாதுகாக்கும். உங்கள் முகத்தை சுத்தப்படுத்தும் ஸ்டீராய்டுகள் கொண்ட கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வித மருந்துகள் உங்களுக்கு உடனடி தீர்வினை கொடுத்தாலும் சில நாட்களில் அவை உங்களது தோலினை அழிக்கும் வல்லமை கொண்டாக இருக்கும்.

மிக முக்கியமாக அடர்நிறம் கொண்ட à®¤à¯‹à®²à¯à®Ÿà¯ˆà®¯à¯‹à®°à¯ பெரும்பாலும் நிழலான பகுதியில் இருப்பது சிறந்த பராமரிப்பாகும். இவ்வகை à®¤à¯‹à®²à¯ உடையோருக்கு  à®¤à¯‡à®¾à®²à¯ புற்றுநோய்க்கான காரணிகள் மிகவும் குறைவு.

ஒரு நல்ல ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி கவனம் செலுத்த வேண்டும். 

நல்ல உணவைச் சாப்பிடுவதன் மூலமும் தோலினை சிறப்பாக்க முடியும். மனிதர்களின் வெளிப்புறத்தில் உள்ள தோல் உடலின் மிகப் பெரிய பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும். 

உண்ணும் உணவின் தன்மையை தோல் பிரதிபலிக்கிறது. எனவே, ஒவ்வொரு உணவையும் ஆரோக்கியம் நிறைந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஒரு நல்ல ஆரோக்கியமான உணவைத் தவிர சருமத்தினை பராமரிக்க காலை, மாலை, இரவு என தூய்மையான நீரின் மூலம் சுத்தப்படுத்துதல் அவசியம். மேலும், சன்ஸ்கிரீன் மற்றும் இரவில் ஒரு வைட்டமின் சி அடிப்படையாகக் கொண்ட கிரீம் பயன்படுத்தவும்.

உடற்பயிற்சி, நிறைய தண்ணீர் தோலினை பராமரிக்கும் காரணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் உடலில் இருந்து வியர்வை வெளியேறும் போது தோலில் உள்ள துளைகளில் அடைபட்டுள்ள நச்சுக்கள் வெளியேறி பிரகாசமான தோற்றத்தை அளிக்கிறது.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...