தீஜ்ரி - சிந்தி சமூகத்தின் பண்டிகை கொண்டாட்டம்

கோவை மாவட்டம், உண்மையில் பலதரப்பட்ட சமுதாய மற்றும் மதங்களின் ஒரு உருவமாக திகழ்கிறது. ஒவ்வொரு திருவிழாவும் இங்கு மிகுந்த கவர்ச்சியுடன், கிருபையுடனும் கொண்டாடப்படுகிறது. இது வடநாட்டினரின் புகழ்பெற்ற ராக்கி பண்டிகையானாலும் சரி, ஜெயின் இன மக்களின் சிறப்புப் பண்டிகையானாலும் சரி, சிந்தி இன மக்களின் தீஜ்ரி விழாவானாலும் சரி கொண்டாட்டங்களுக்கு குறையிருப்பதில்லை. 

கோவையில் 500-க்கும் குறைவான குடும்பங்களை மட்டுமே கொண்டுள்ள சிந்தி சமூகம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் சிந்தி சமூக மக்களின் தீஜ்ரி விழா அழகான முறையில் கொண்டாடப்பட்டது.



சிவபெருமானின் மனைவியான பார்வதியை சிறப்பிக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நிகழ்ச்சியில் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் வாழ்நாள் மற்றும் செழிப்புக்காக வழிபடுகின்றனர். அதிகாலைப் பொழுது முதலே இந்த வழிபாடு துவங்குகிறது. 



"தீஜ் எங்களுக்கு ஒரு மிக முக்கியமான திருவிழா, இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளைப் போல் அல்லாமல் தனிப்பட்ட குடும்பங்களாக அல்லாமல் பல சமூகத்தினரும் பங்கேற்றுள்ளனர். அனைத்து வயதினரும் ஒன்றாக ஒரு பெரிய குடும்பமாக கொண்டாடி வருகின்றனர்" என்கிறார் திம்ப்ல் மெய்னானி.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாதுளை, கொய்யா மற்றும் வெள்ளரிக்காய் போன்ற பழங்களையும் ஒரு தெய்வமாகக் கருதி வழிபாடுகள் நடக்கின்றன. 

இதுகுறித்து சிந்தி சமூக வயதுமுதிர்ந்த பிரம்மனி கீதா கூறுகையில், "நாங்கள் முதலில் பாகிஸ்தானில் இருந்தோம். பின் அங்கிருந்து பிரிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நாங்கள் குடிபெயர்ந்தோம். இந்த மாவட்டம் எங்களுக்கு ஒரு வாழ்வை அமைத்துள்ளது. நாங்கள் இந்த நாட்டில் இருக்கும்போது எங்கள் தாய்நாட்டில் இருப்பதைப் போல உணர்கிறோம். அதனால் கோவை எங்களது சொந்த மாவட்டமாகவே தற்போது திகழ்கிறது. எங்களது சிறப்பு விழாவான தேஜ்ரி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கோவையில் கொண்டாடி வருகிறோம்" என்றார்.



Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...