சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் செய்யவேண்டியது என்ன? : கோவை காவல்துறை அதிகாரிகள் விளக்கம்


தொழில்நுட்பம் வளர்ந்து நவீனமயமாக்கல் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் அதற்கேற்ப குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

ஆண்ட்ராய்டு உலகில் புகுந்துவிட்ட மனிதர்கள் சமூக வலைதளங்கள் மீதான மோகத்தில் வாழ தொடங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொருவரின் தனியுரிமையும் கேள்விக்குள்ளாகிவிட்டது. சமூகவளைதங்களில் பதிவேற்றப்படும் ஒரு நபரின் புகைப்படம் சுலபமாக கயவர்கள் கையில் சிக்கிவிடுகிறது. அந்த புகைப்படத்தை வைத்து கயவர்கள் போடும் ஆட்டம் பெண்களையும், இளைஞர் சமூகத்தையும் திக்குமுக்காட வைக்கிறது.



பாதிக்கப்படும் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ இது குறித்து எப்படி? எங்கு சென்று புகார் அளிப்பது? என்று தெரியாமலும், புகார் அளிக்கும் நேரத்தில் அது வெளியே கசிந்தால் சமூகத்தில் தலைகாட்ட முடியாது என்று பயந்தும் தங்கள் குமறல்களை மனதினுள்ளேயே புதைத்து வாழ்கின்றனர். இன்னும் சிலர், தவறான முடிவுகளால் இம்மண்ணுலகை விட்டே மறைந்துவிடுகின்றனர்.

மனித வாழ்வையே அச்சுறுத்தும் இத்தகைய சைபர் குற்றங்களை களைவது குறித்தும், பாதிக்கப்பட்டவர் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆசைத்தம்பி சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

மக்கள் பலரும் இன்று சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது அவரவர் சுய விபரங்களையும், புகைப்படத்தையும் இணையத்தில் பதிவேற்றுகின்றனர்.

மார்ஃபிங் கயவர்கள்:

அற்ப ‘லக்ஸ்’ மற்றும் ‘கமெண்டு’களுக்காக பதிவேற்றும் புகைப்படங்களை சில சமூக விரோதிகள் திருடி, அதை மார்ஃபிங் செய்து பல ஆபாச இணையதளங்களில் பதிவேற்றுகின்றனர். இது சம்மந்தப்பட்டவர்களை மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிவிடுகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்.

அதனால், கூடுமானவரையில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம். மேலும், முகம் தெரியாத நபர்களை உங்கள் பேஸ்புக் நண்பராக வைத்திருப்பதை தவிர்த்துவிடுங்கள்.

தொலைபேசி அழைப்புகள்:

தொலைபேசி அழைப்புகளின் மூலம் பரிசுகள் விழுந்துள்ளதாக கூறி உங்கள் வங்கி விபரங்கள், மற்றும் குறுஞ்செய்தி தொடர்பான  à®µà®¿à®µà®°à®™à¯à®•ளை யாரேனும் கேட்டால் அது போலி என்பதை உணருங்கள். இல்லையேல் மர்ம நபர்கள் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருட நீங்களே கொடுக்கும் வாய்ப்பாக அது அமைந்துவிடும். வங்கிகள் ஒருபோதும் இந்த தகவலை வாடிக்கையாளர்களிடம் கேட்பது கிடையாது. இது போன்ற சைபர் குற்றங்கள் தற்போது அதிகரித்துவருகின்றன.

ஒருவரின் புகைப்படம் அல்லது தனியுரிமை தொடர்பான வீடியோக்கள்  à®‡à®£à¯ˆà®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ பதிவேற்றப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்கள், மாநகரில் உள்ள சைபர் க்ரைம் செல், அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். புகார் தொடர்பான விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்படும். பொதுமக்கள் எந்த தயக்கமின்றி காவல்துறையை அணுகலாம்.

இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

தண்டனை:

அனுமதியின்றி ஒருவரின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றுதல், அதில் ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமான குறுஞ் செய்திகளை பெண்களுக்கு அனுப்புதல் போன்ற குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 முதல் 2 லட்சங்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கோவை மாநகர சைபர்கிரைம் துறையின் காவல் ஆய்வாளர் மல்லிகா நமக்களித்த பேட்டியில் கூறியதாவது:-

பேஸ்புக்-ல் ஒருவரின் ஆபாச புகைப்படம் பதிவேற்றப்பட்டால், சம்மந்தப்பட்டவரோ, உறவினர்களோ, அல்லது  à®…வரின் நலம் விரும்பியோ போலீசாரிடம் புகார் அளிக்க முடியும். கோவை மாநகர சைபர்கிரைம் செல்-ஐ பொறுத்தவரை இங்கு அதிகமான பெண் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அதனால், பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக எங்களிடம் புகார் அளிக்கலாம். புகார் அளித்தவர்கள் தொடர்பான விவரங்கள் பாதுகாக்கப்படும்.

எங்களுக்கு புகார் அளித்தவுடன், சம்மந்தப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோ-வை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படும். மற்ற இணையதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களும் நீக்கப்படும்.

இந்த குற்றங்கள் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு 19 புகார்கள் வந்துள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில் 35 புகார்கள் வந்துள்ளது.

புகைப்படங்கள் மட்டுமல்லாது, பெண்களின் தொலைபேசி எண்களும், இணையத்தில் பதிவேற்றம் செய்யபடுகிறது. பெரும்பாலும் கல்லூரி மாணவ, மாணவிகளே இந்த புகாரை அளிக்கின்றனர். காவல்துறையினர் பக்கபலமாக இருந்தாலும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை காதலருக்கோ, நண்பருக்கோ அனுப்பிவிட வேண்டாம். எந்த நேரத்திலும் அது உங்களுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது.  

இது போன்ற சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடனடியாக காவல்துறையினரை அணுகினால், புகைப்படம் அல்லது வீடியோ மற்றவர் கைகளுக்கு செல்வதை துரிதாமக தடுக்க முடியும்.

மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மற்றும்  à®šà®¨à¯à®¤à¯‡à®•ங்களுக்கு 04222399100 இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...