ஓணம் திருநாளை முன்னிட்டு என்ட கேரளத்தில் "ஓணம் சாத்யா" விழா கோலாகலம்

கேரளத்தை சிறப்புடன் ஆண்டு வந்த மகாபலி என்ற மன்னரை மீண்டும் வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மொழி பேசும் கேரளா மாநிலம் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் அத்திப்பூ கோலமிட்டும், பாரம்பரிய இசையான செண்டைமேளம் இசைத்து நடனமாடியும் பொதுமக்கள் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. கேரள உணவு வகைகளில் கோவையில் புகழ்பெற்ற என்ட கேரளம் உணவகத்தில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை ஓணம் சாத்யா உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. 

கேரளத்து மக்கள் அதிகம் இடம்பெயர்ந்த பகுதிகளில் ஒன்றான நம் கோவையிலும் மலையாளம் பேசும் மக்களைக் கவரும் வகையில் செயல்பட்டு வருகிறது "என்ட கேரளம்" உணவு விடுதி.

40 ஆண்டுகள் அணுபவமுள்ள நம்பூதிரி உன்னிகிருஷ்ணன் முன்னிலையில் என்ட கேரளத்தில் உணவு தயாரிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர், கேரளாவின் தலைநகரம் திருசூரில் ஆயுர்வேத மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார். 

என்ட கேரளம் உணவகத்தில் நடைபெறும் ஓணம் சாத்யா உணவுத் திருவிழா குறித்து நம்பூதிரி உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:-

ஓணம் திருநாளன்று நல்ல உடல்நலம் வேண்டியும், செல்வம் நிறைந்த வாழ்வினை மேற்கொள்ளவும் வேண்டி பல்வேறு உணவு வகைகளை தயாரித்து கடவுளுக்கு படைத்து நன்றி தெரிவிப்போம். 

கடந்த 5 வருட காலமாக ஓணம் திருநாளை நான் என்ட கேரளம் உணவு விடுதியில் கொண்டாடி வருகிறேன். இங்கு ஓணத்தை முன்னிட்டு 25-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. இதற்கான காய்கறிகள் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது. 

சாத்யா என்பது உணவு வகைகளின் எண்ணிக்கை அல்ல. அது ஒரு கலாச்சாரம். என்ட கேரளம் உணவகத்தில், புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்படுகிறது. நிறைவாக, உணவு செரிமானத்தை தூண்டும் வகையில் ரசம் மற்றும் பட்டர்மில்க் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது" என்றார்.

கேரளாவின் பாரம்பரியமான ஓணம் பண்டிகை குறித்து அறிந்துகொள்ளவும், ஓணம் சாத்யா சிறப்பு உணவுகளை உண்டு மகிழவும் கோவையில் அமைந்துள்ள என்ட கேரளம் ஒரு சிறப்புத் தளமாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

என்ட கேரளத்தின் ஓணம் சாத்யாவில் கலந்துகொள்ள முன்பதிவிற்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்- 0422-6505545 / 8489924983.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...