நதிகளை காப்பதற்கான ஒவ்வொரு சிறிய முயற்சியும் பெரும் வெற்றியைத் தரும்- மித்தாலி ராஜ்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரருமான மித்தாலி ராஜ், நதிகளை காப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

அண்மையில், கோவையில் நடைபெற்ற "நதிகளை மீட்போம்" பேரணியின் தொடக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது நேரடி ஆதரவை அளித்தார். இந்நிலையில், கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், இன்று ஆர்.எஸ்.புரத்தில் இலாப நோக்கமற்ற ஸ்பார்ஸ் நிறுவன துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஸ்பார்ஸ் தன்னார்வ நிறுவனமானது சமுதாயத்தில் பின்தங்கிய பெண்களுக்கு உதவும் நோக்கில் மனதநேய மனம்படைத்த பெண்களினால் உருவாக்கப்பட்டதாகும்.

இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற மித்தாலி ராஜ், ரசிகர்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்ந்து அவர் பதிலளித்து வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், தனது திறமையின் மீது அதிக நம்பிக்கை வைத்த தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டேன்.

ஒவ்வொரு பெண்கள் தனது திறமையினை அறிந்து அதில் சாதனை படைக்க வேண்டும். திருமணம் என்பது வாழ்வின் ஒரு அங்கம். அதனை ஒரு காரணமாகக் கொண்டு பெண்கள் முடங்காமல் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.

சூற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் ஈடுபட்டு தங்களது சேவையினை வெளிப்படுத்த வேண்டும். நமது நாட்டின் இயற்கை மற்றும் அழிந்து வரும் நதிகளை மீட்டெடுக்க மக்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். நதிகளை காப்பதற்காக நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சிறிய முயற்சியும் பெரிய அளவிலான வெற்றியைத் தரும் என்றார். 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...