மழலையர்களின் கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் ”விஜயதசமி” நாள்

நவராத்திரி பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகா நவமி என்று தொழில்களையும், கல்வியையும் போற்றும் விதமாக அதற்கடுத்த நாள் விஜயதசமி இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஓர் சிறப்பான நாள் ஆகும்.

இந்து புராணத்தின் படி எருமை தலை கொண்ட மகிசன் என்னும் அரக்கன் சாமுண்டி மலையை ஆக்கிர மித்து கொடுமையான அட்டகாசம் செய்து வந்தான். 3 பெண் சக்திகள் கொண்டு தான் அவனை அழிக்க முடியும். வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான்.

அவனது அட்ட காசத்தை கண்ட முப்பெருந்தேவியரான சரஸ்வதி, மகாலட்சுமி, பராசக்தி ஆகியோர் இணைந்து துர்கா அவதாரம் எடுத்து 9 நாட்கள் தவம் இருந்து 10-வது நாளான தசமி தேதியன்று, அந்த அரக்கனை வதம் செய்தனர். அந்த நாளையே விஜயதசமி என்ற வெற்றி நாளாக கொண்டாடுகிறோம்.

இந்த நாளில் செய்யும் காரியம் அனைத்தும் வெற்றி கரமாக அமையும் என்பது ஐதீகம் ஆகும். குழந்தைகள் கல்வி பயில இந்த நாளை தேர்வு செய்து பள்ளியில் சேர்ப்பர். இந்த நாளில் குழந்தையின் நாவில் தேனை தொட்டு ஓம் என்று எழுதி கல்வியை துவக்கி வைப்பதும் ஐதீகம் ஆகும்.



விஜயதசமி அன்று எடுத்த காரியம் தடங்கல் ஏதும் இன்றி வெற்றிகரமாக தொடரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. அந்த நாளில் தொடங்க கூடிய கல்வியானது, மேலும் மேலும் வளர்ந்து தடையின்றி முன்னேறுகிறது. மேலும் இந்த நாளில் ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக அமைகிறது. எந்தவித நஷ்டமும் இன்றி லாபகரமாகவே அமைகிறது.

மேலும் இந்த நாளில் துவக்கி வைக்க கூடிய பயிற்சிகள் அனைத்தும் தங்கு தடையின்றி எளிதில் பயில கூடிய வகையில் அமைகிறது. மொத்தத்தில் சகல காரியங்களுக்கும் வெற்றி தரக்கூடிய நாளாக விஜயதசமி அமைகிறது.

இந்த நன்னாளில் கோவை மாவட்டம் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என வழிபட்டு நெல்களின் மத்தியில் தமிழின் முதல் எழுத்தான ”à®…”-வை எழுத வைப்பர்.



இது தொடர்பாக, கோவிலில் இருந்த பெற்றோர் ஒருவர் கூறுகையில்,  நெல்களின் மத்தியில் குழந்தைகளை எழுத வைப்பதன் மூலம், கடவுள் அறிவை வழங்குவார் என்ற நம்பிக்கை. என்றார்.



இதேபோல மழலையர் பள்ளியில் குழந்தையை சேர்க்க வந்த மினி என்பவர் பேசுகையில், நாங்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். விஜயதசமியன்று எனது குழந்தையை மழலையர் பள்ளியில் சேர்க்க வந்துள்ளேன். எனது குழந்தை முதல்முறையாக பள்ளிக்கு செல்ல இருப்பதால், அவனது எதிர்காலம் நன்கு அமைய வேண்டும் எனக் கருதி இந்த நாளை தேர்வு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 



கல்வி மட்டுமன்றி பயிற்சிகள், தொழில் போன்ற சகல நிகழ்வுகளையும் விஜயதசமி அன்று துவக்கி வைப்பதும் வழக்கமாகும்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...