கோவை இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள ஆல்கஹால் அல்லாத ”மாக் பீர்”


கோவை - சேலம் சாலையில் உள்ள பீளமேடு பகுதியில் ஹிட்டன் ஃபோர்க் (Hidden Fork) எனும் உணவகம் செயல்பட்டு வருகிறது. கல்லூரிகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், இந்த உணவகத்திற்கு கல்லூரி மாணவர்கள் அதிகம் செல்கின்றனர். அந்த உணவகத்தில், பிரபலமான ஆல்கஹால் அல்லாத ”மாக் பீர்” கல்லூரி மாணவர்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றுள்ளது.



மதுபானக் கடைகளில் விற்கப்படும் பீர் போன்ற மனமும், சுவையும் கொண்ட இந்த ”மாக் பீர்” ஆல்கஹால் அல்லாமல் தயாரிக்கப்படுகிறது. இது, உடலுக்கு கேடு விளைவிக்காது என்பதால், ஹிட்டன் ஃபோர்க் உணவகத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் "மாக் பீரை" அதிகளவு விரும்புகின்றனர்.



இது குறித்து பேசிய ஹிட்டன் ஃபோர்க் உணவகத்தின் இணை உரிமையாளர் முகமது ரமீஸ் ராஜா பேசுகையில், இது உண்மையான பீர் அல்ல. மாக் பீரானது, மதுபானக் கடைகளில் கிடைக்கும் பீரின் சுவையை பெற்றிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், பி.எஸ்.ஜி மேலாண்மைக் கல்லூரியில் பயின்றேன். நான் கல்லூரியில் பயிலும் போதே இந்த உணவகத்தை தொடங்கினேன். குறைந்த விலை, தரமான உணவால், என்னுடைய உணவகம் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே, எனது உணவகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டேன். அந்த திட்டமிடலின் பலன்தான் தற்போதைய ஹிட்டன் ஃபோர்க் உணவகம். இவ்வாறு முகமது ரமீஸ் ராஜா கூறினார்.



ஹிட்டன் ஃபோர்க் உணவகத்தில் மாக் பீருக்கு நிகராக நல்ல ருசியான, புகழ்பெற்ற சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளும் தயார் செய்யப்படுகிறது.



Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...