சாதிக்க வயது ஒரு போதும் தடையல்ல... நிரூபித்துக் காட்டிய 60 வயதில் ஓவியராகிய பத்மாவதி கோவிந்தராஜன்



டி.எஸ் அருணாச்சலம் செட்டியர் என்பவரின் மகளாகப் பிறந்தவர் பத்மாவதி. கோவை திருச்சி சாலை அருகே உள்ள பகுதியில் பிறந்து வளர்ந்த இவர், டி.எஸ். கோவிந்தராஜன் என்பவரை கடந்த 1961ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கோவை பந்தயசாலை பகுதியில் கணவர் மற்றும் மாமியார் மீனாட்சி அம்மாளுடன் பத்மாவதி கோவிந்தராஜன் வசித்து வருகிறார்.  கோவிந்தராஜன், பத்மாவதி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக, அவர்களில் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் குறுகிய காலத்திலேயே  உயிரிழந்தனர். 

இந்த நிலையில், பத்மாவதியின் கணவர் டி.எஸ்கோவிந்தராஜன் தனது முந்தைய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, நான் காபி வாரியத்தில் பணியாற்றி வந்தேன். இதனால், குழந்தைகளை தனது மனைவி பார்த்துக் கொண்டார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவர்களுடன் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த 2000-ம் ஆண்டு சாயிபாபா காலனி அருகே உள்ள கே.கே. புதூருக்கு அவர்கள் இடம்பெயர்ந்தனர். இந்தத் தகவல்கள் குறித்து கேட்டுக் கொண்டிருக்கும் போது, காபி மற்றும் பிஸ்கட்டுடன் பத்மாவதி கோவிந்தராஜன் தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசுகையில், விடுமுறை நாட்களில் எங்களது பேத்தி நேதாரஸ்ரி எங்களுடன் இருப்பார். நானும், எனது கணவரும் அவளுக்கு எழுதவும், வரையவும் கற்றுக் கொடுப்போம். எனது மகள் சுமித்ராவிடம் இருந்து பேத்தி நேதாரஸ்ரி ஓவியம் வரைவதை கற்றுக் கொண்டார். எதிர்பாராதவிதமாக எனது மகள் காலமாகிவிட்டார். 

இதைத் தொடர்ந்து, பல்வேறு சூழ்நிலைகளுக்கு பிறகு எனது 63 வயதில், நான் ஓவிய ஆசிரியராக உருவெடுத்தேன். இது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. தஞ்சாவூர் ஓவியங்களை வரைய லஷ்மி சுப்ரமணியம் என்பவரிடம் கற்றுக் கொண்டேன். 



அரவது தூண்டுதலால் ராமலிங்க செட்டியார் à®®à¯‡à®²à¯à®¨à®¿à®²à¯ˆà®ªà¯ பள்ளியில் நடந்த ஃபெவிகிரைல் பயிலரங்கில் இணைந்தேன். அங்கு முழுமையாக பயின்று சான்றிதழ்களை பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார். 



60 வயதில் ஓவிய ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய பத்மாவதி, வாரநாட்களில் வீடுகளிலும், தேவைப்படும் போது பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் கற்றுத் தருகிறார். இவர் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியக்கலைக் குறித்து கற்பித்துள்ளார்.  மறைந்த தனது மகளான கவரியின் பெயரில் நடத்தி வரும் இந்த ஓவிய வகுப்பை, தனது வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில், ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர்ஸ், காப்பர் எம்போசிங், வாஸ்து கண்ணாடி, பஞ்சபூதங்கள் வாஸ்து, காபி பெயிண்டிங், கிரிட்டிங் கார்டு  உள்ளிட்ட பல்வேறு படங்களை வரைந்து விற்பனை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இல்லத்தில் ஓவியக் கண்காட்சியை நடத்தினார்.  



பத்மாவதி மற்றும் கோவிந்தராஜன் தம்பதியினரின் வாரிசுகள் வெளிநாடுகளில் கைநிறைய சம்பாரித்துக் கொடுத்தாலும், இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பொழுதை கழிக்கவிரும்பவில்லை. தங்களது வாழ்க்கையை பிடித்தமான வகையில், வாழ்வதுடன், சமுதாயத்திற்கு தேவையான பணிகளையும் செய்து வருகின்றனர்.  60 வயதில் தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு பத்மாவதி கோவிந்தராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார். 


Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...