சுதந்திரப் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து அகிம்சை வழியில் போராடிய தியாகி டி.டி.திருமலை



இந்திய விடுதலையடைய காரணமான தலைவர்களில் முக்கியமானவர் மகாத்மா காந்தி. தென்னாப்ரிக்காவில் இந்திய மக்களின் பிரச்சனைகளுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர். இதனால், தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் மீது அவருக்கு பற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் 1896 -1946 ம் ஆண்டு வரை நடந்த சுதந்திர போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி பலமுறை மதுரைக்கு வந்தார். 

இதன்காரணமாக, அவரது தலைமையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் நாட்டுப்பற்று அதிகம் கொண்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், ஸ்ரீவில்லிப்புதூரை சேர்ந்த டி.டி. திருமலையும் ஒருவராவார். 

ஜானகியம்மாள் மற்றும் தோட்டாத்திரி ஐயங்கார் ஆகியோரின் மகனாகப் பிறந்த திருமலை, மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் கருத்துக்களை துண்டுபிரசுரங்களில் விநியோகம் செய்து வந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் கதர் ஆடைகளுக்கு ஆதரவாக தலைமையேற்று போராட்டத்தை நடத்திய அவர், தூய்மையான குடிநீர் திட்டத்தை வலியுறுத்தி சென்னை சென்றார். இதைத் தொடர்ந்து, வினோபா ஃபாவேவை ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அழைத்து, நிலக்கொடை இயக்கத்திலும் தன்னையும் சேர்த்துக் கொண்டார். 

பின்னர், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி பிரச்சாரகராகவும் அவர் சேவை செய்தார். நாளடைவில், நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிரபலமானதை போலவே, மதுரையில் திருமலையும் மிகவும் பிரபலமடைந்தார். இதன்மூலம் மதுரையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அவரைப் பற்றிய பாடங்கள் இடம்பெற்றன. 

நாடு முழுவதும் கடந்த 1969 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, காந்தி அமைதி மையம் உருவாக்கப்பட்டது. இதேபோல, காந்தியின் வரலாறு அடங்கிய புத்தகத்தை எழுதிய திருமலை,  பள்ளிகளில் அதனை மாணவர்கள் பாடமாக படிக்க ஏற்பாடு செய்தார். காந்தியின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்க அரும்பாடுபட்ட அவர், 1973 ஆம் ஆண்டு சென்னையில் காந்தி பயில் மையத்தை தொடங்கினார். இதில், ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் பங்கேற்று, மகாத்மா காந்தி கொள்கைகள் குறித்த தேர்வுகளை எழுதினர். 

இதில், கோவை மாவட்டம் ஜி.ஆர்.ஜி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியும், மகாத்மா காந்தியின் கொள்கைகள் மீதான ஈர்ப்பால், தங்களது பள்ளி மாணவர்களையும் அந்தத் தேர்வுகளை எழுத அனுமதித்து வருகிறது. 

இதனிடையே, அண்மையில் கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் லீட் இந்தியா,  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில், சுதந்திர போராட்டத் தியாகி திருமலையின் வாரிசுகள் விப்ரா நாராயணனன், சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், தங்களது தந்தை, மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் எண்ணங்களை மாணவர்களிடம் கொண்டு சென்றார். இப்போது, அண்ணாமலை, பிரேமா அண்ணாமலை, மோகன் மறும் பாண்டியன் ஆகியோர் அதனை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...