உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளை நமக்கு தெரியும். ஆனால் கட்சி ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் தரும் கட்சியை தெரியுமா?


தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளை நமக்கு தெரியும். ஆனால் கட்சி ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் தரும் கட்சியை தெரியுமா? 

கவுன்சிலர்களே கோடிகளில் புழங்கும் இன்றைய காலத்தில், எம்.எல்.ஏ, எம்.பி, ஏன் முதலமைச்சராக இருந்தால் கூட தன் சம்பளத்தை அப்படியே கொடுத்து விட்டு, கட்சி கொடுக்கும் சொற்ப ஊதியத்தை வைத்து வாழும் கட்சியினர் யார்? 

இந்தியாவில் ஓராண்டில் நடக்கும் போராட்டங்களை எடுத்து கொண்டால், அதில் அதிக போராட்டம் நடத்தும் கட்சி எதுவாக இருக்கும்?... 

சந்தேகமே வேண்டாம், அது கம்யூனிஸ்ட்கள் தான்...!

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் எந்த கட்சி அதிக முறை வென்றிருக்கும்? அதிமுகவா, திமுகவா என யோசிக்க வேண்டாம். அதற்கும் பதில் கம்யூனிஸ்ட்கள் தான். 

சுதந்திரத்தின் போது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து, மக்கள் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த கம்யூனிஸ்ட்கள், பின்னர் தேர்தலில் பங்கெடுத்து புரட்சி தலைவருக்கும், புரட்சி கலைஞருக்கும் வாக்கு கேட்டு வீதியில் திரிந்த விநோதம்(!)நடந்தேறியது. 

கோவையின் வளர்ச்சியில் எப்படி தொழிலாளர்களின் பங்கு இருக்கிறதோ, அதேபோல கம்யூனிஸ்ட்களின் வெற்றியில் தொழிலாளர்களுக்கு முக்கிய பங்குண்டு. தொழிலாளர்கள் நிரம்பிய கோவையில் தொழிற்சங்கங்கள் வலுவாக இருந்ததும், தொழிலாளர்களுக்காக போராடும் கட்சியாக அறியப்பட்டதுமே கம்யூனிஸ்ட் வெற்றிகளுக்கு அடிப்படை.

கோவையின் முதல் பெண் எம்.பி



முதல் பொதுத்தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியை போட்டியின்றி காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருந்தாலும், ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தி.à®….ராமலிங்க செட்டியாரின் மறைவை தொடர்ந்து, கோயம்புத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், சுயேட்சைகளும் களமிறங்கின. இருப்பினும் கோயம்புத்தூர் தொகுதியை தக்க வைத்தது, காங்கிரஸ். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்வதி கிருஷ்ணனை 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் என்.எம்.லிங்கம் வெற்றி பெற்றார். அதேசமயம் பார்வதி கிருஷ்ணனும் நாடாளுமன்றத்திற்கு சென்றார், மாநிலங்களவை உறுப்பினராக. 

அடுத்து வந்த இரண்டாவது பொதுத்தேர்தல் தேர்தல் களம் வேறு விதமாக இருந்தது. சுதந்திரத்தின் பத்தாண்டுகளை இந்தியா அனுபவித்து கொண்டிருந்தது. மொழி வழிமாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் இந்தியா வரைபடமே மாறியிருந்தது. ஆனால் வாக்காளர்கள் மாறாமல் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். எதிர்கட்சி வரிசையில் கம்யூனிஸ்ட்கள் அமர்ந்தனர். 

’திராவிட நாடு’ கோரிக்கையோடும், ’வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கத்துடனும் திமுக முதல் முறையாக தேர்தல் களம் கண்டது. முதல் தேர்தலிலேயே சட்டமன்றத்துக்கு 15 பேரும், நாடாளுமன்ற மக்களவைக்கு 2 பேரும் தேர்வாகினர். காங்கிரசை வேரோடு பிடுங்கி எறிவதே என் முதன்மையான பணி என்ற பெரியார், இம்முறை காங்கிரசில் இருந்த ’பச்சை தமிழரான’ காமராசருக்கு ஆதரவு அளித்தார். மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கேரளா பகுதிகள் பிரிந்ததால் கம்யூனிஸ்ட்களின் பலம் குறைந்திருந்தது. ஆனால் அதற்கு மாறாக கோவை கம்யூனிஸ்ட் வசமானது.

கோவை மக்களவை தொகுதியில் 4 இலட்சத்து 62 ஆயிரத்து 294 வாக்காளர்கள் இருந்தனர். 2 இலட்சத்து 31 ஆயிரத்து 245 பேர் வாக்களித்த இத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்வதி கிருஷ்ணன், ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 454 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 47.76 சதவீதவாக்குகளுடன் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ரங்கசாமியை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

கோவையின் முதல் பெண் எம்.பி.யாக நாடாளுமன்ற மக்களவைக்குள் நுழைந்தார் பார்வதிகிருஷ்ணன். 

அரசியல் குடும்பம்

திமுகவில் கணக்கு கேட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர், அதிமுக என்ற தனிக்கட்சியை துவங்கியிருந்த காலம்.1974 ல் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வந்திருந்தது. கூடவே கோவை மேற்குசட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல். 

’இரட்டை இலை’யின் முதல் சட்டமன்ற உறுப்பினரான அரங்கநாயகத்திற்கு வாக்கு கேட்க வந்தார், எம்.ஜி.ஆர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக கூட்டணி வேட்பாளரான பார்வதி கிருஷ்ணனுக்கும், கோவை வீதிகளில் வாக்கு சேகரித்தார், எம்.ஜி.ஆர். மீண்டும் வென்ற பார்வதி கிருஷ்ணன் அடுத்து வந்த 1977 பொதுத்தேர்தலிலும்வெற்றியை தன்வசமாக்கினர். கோவை மக்களால்மூன்று முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பார்வதி கிருஷ்ணன், 1962 மற்றும் 1980 தேர்தல்களில் தோல்வி கண்டுள்ளார்.பார்வதி கிருஷ்ணனின் குடும்பமே ஒரு அரசியல் குடும்பம். இவரது தந்தை சுப்பராயன் மெட்ராஸ் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர்.இந்தியாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ராதாபாய் இவரது தாய். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு ஆகியோருடன் பார்வதி கிருஷ்ணன், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஒன்றாக பயின்றவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக பார்வதி கிருஷ்ணன், காங்கிரஸ்காரரான தனது தந்தை சுப்பராயனை எதிர்த்து அரசியல் களம் கண்டார். 

கம்யூனிஸ்டான இவரது கணவர் என்.கே. கிருஷ்ணனும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், தேர்ந்த தொழிற்சங்கவாதியாகவும் செயல்பட்டவர் என பார்வதி கிருஷ்ணனுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழாரம் சூட்டுகின்றனர். கோயம்புத்தூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதலும், முடிவுமான ஒரே பெண் எம்.பி. பார்வதி கிருஷ்ணன் தான். 

தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...