2019 – கோவை தேர்தல் களம்

கோவை : போட்டியின்றி தேர்வான கோவையின் முதல் எம்.பி

கோவை : போட்டியின்றி தேர்வான கோவையின் முதல் எம்.பி 

நூறு வயது பாட்டிகள் தள்ளாத வயதிலும் தளராமல் வந்தோ, இளம் ஜோடிகள் மணக்கோலத்தில் மாலையோடு வந்தோ,வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய காட்சிகளை ஒவ்வொரு தேர்தல் நாளான்றும் பார்த்திருப்போம். அதனை தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் சளைக்காமல் தேர்தலுக்கு தேர்தல் காட்டி கொண்டே இருக்கின்றன. இருந்தாலும், வாக்குபதிவு என்பது 70 சதவீதத்தை தாண்டுவதே இல்லை. அந்த 70 சதவீத மக்களில் 35 சதவீதமக்கள் விரும்புவோரே நாடாளுபவர்களாக இருக்கிறார்கள். 

உலகின் மாபெரும் ஜனநாயக நிகழ்வான தேர்தலில், நாம் எத்தனை ஆண்டுகளாக வாக்களித்து கொண்டிருக்கிறோம் என தெரியுமா? கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக நாம் வாக்களித்து வருகிறோம் என்றால் நம்ப முடிகிறதா? 

ஆம்… முதல் வாக்குபதிவு நடந்தது 1920 ம் ஆண்டு. ஆனால் இன்று போல வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்கவில்லை. இந்த உரிமை சுதந்திரத்திற்கு பிறகே அனைவருக்கும் கிடைத்தது. சுதந்திரத்திற்கு முன்பே தேர்தல்களில் வென்று நீதிக்கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவைதமிழகத்தில் ஆட்சி நடத்தியிருக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனநாயக கட்டமைப்புக்கான செயலூக்கத்தை பிரிட்டிஷாரிடம் இருந்தே இந்தியா பெற்றிருந்தது. 

பிரிட்டிஷ்காரர்களால் 12 பேர் கொண்ட சபையாக செண்ட்ரல் அசெம்பிளி என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அதாவது மத்திய சட்ட சபை என்றே இருந்தது. அதுவே மக்களவை, மாநிலங்களவை கொண்ட இன்றைய நாடாளுமன்றமாக மாறியிருக்கிறது என்பது வரலாறு.

நாடாளுமன்ற உறுப்பினரை பலரும் பஞ்சாயத்து தலைவர்களை போல தான் கருதுகிறார்கள். மக்களுக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தெளிவாக தெரிவதில்லை. ஸ்கூல், காலேஸ் அட்மிசன் சீட் வாங்கி தருதல், தெருவிளக்கு, சாக்கடை பிரச்சணைகளை சரிசெய்தல்உள்ளிட்டவை எனகருதுகின்றனர். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்பணி என்பது நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்று சட்டங்களை இயற்றுவதும், வாக்காளர்களின் பிரச்சணைகளுக்கு நாடாளுமன்றம் மூலமாக தீர்வு காண்பதும் தான். 

முதல் நிதியமைச்சர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இதனை தாக்கல் செய்தவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார். தலை சிறந்த பொருளாதார நிபுணர், நிதித்துறை பிதாமகன் என போற்றப்படும் இவர், கோவைக்காரர். 

சுதந்திரத்திற்கு பிறகான அமைச்சரவையில் காந்தியின் பரிந்துரையினால் பிரதமர் நேரு இவரை நிதியமைச்சராக தேர்வு செய்தார். அப்போது இங்கிலாந்தில் ’ஸ்டெர்லிங் கிரைசிஸ்’ எனும் சிக்கலான வழக்கில் வழக்காடி, இங்கிலாந்திடம் இருந்த பல கோடிக்கணக்கான கையிருப்பு பணத்தை இந்தியாவிற்கு வாங்கி தந்தவர். நிதியமைச்சராக இருந்தபோது தமிழ் கலை களஞ்சியம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். பேரூர் தமிழ் கல்லூரி அமைய காரணமாக இருந்தார். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகராகவும் பணியாற்றியவர். 

இவர் கோவையில் தொழில் மற்றும் வர்த்தக நிலையை உயர்த்த கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபையையும், ஜவுளி ஆலைகளின் வளர்ச்சிக்காக தென்னிந்திய மில் அதிபர்கள் சங்கத்தையும் ஏற்படுத்தியவர்.

தேர்தல்களின் வழியாக உருவாக்கப்பட்ட அடித்தளத்தின் மீது தான் சுதந்திர இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனை கட்டமைத்தவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. புதிய இந்தியாவை ஜனநாயக அரசியல் பாதையில் கொண்டு செல்ல அவர் தேர்ந்தெடுத்த பாதை, தேர்தல். ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. 

போட்டியின்றி தேர்வான முதல் எம்.பி.சுதந்திர காற்றை இந்தியா சுவாசிக்க ஆரம்பித்திருந்த காலகட்டம். பல சிக்கல்கள், சவால்களை கடந்து அறிவிக்கப்பட்டது, சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல். 

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை துவங்குவதற்கு முன்னரே, தேர்தல் ஆணையம் களத்தில் இறங்கியிருந்தது. விழிப்புணர்வு பரப்புரைகள் மூலம் பல தரப்பட்ட மக்களையும் வாக்கு சாவடிக்கு இழுத்து வர முயற்சித்தது. 

1951 அக்டோபர் முதல் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்தது. மெட்ராஸ் மாகாணத்தில் 1952 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நாளில் நடைபெற்றது. 62மக்களவை தொகுதிகள் கொ ண்ட மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 293 வேட்பாளர்கள் களம் கண்டனர். சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்ற பெருமிதத்துடன் நாடு முழுவதும் வாக்கு சேகரித்தது காங்கிரஸ் கட்சி. 

காங்கிரஸ் கட்சி கொடுத்தது பசியும், பஞ்சமும் தான் என்றன, எதிர்கட்சிகள். முதலாளிகளுக்கு சேவை செய்கிறது காங்கிரஸ், என்றது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவு தெரிவித்தார், பெரியார்.தேர்தல் அரசியலில் இருந்து விலகி நின்ற திமுக, திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு தருபவர்களுக்கே ஆதரவு என்றது. 

தேர்தல் முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி ஆட்சி கட்டிலில் எளிதாக அமர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாய் வளர்ந்திருந்தது. அதில் மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி 35 இடங்களிலும், கம்யூனிஸ்ட்கள் 8 இடங்களிலும் வென்றன. தேர்தல் களோபரங்களுக்கு இடையே கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாய் காட்சியளித்தது. 3 இலட்சத்து 46 ஆயிரத்து 405 வாக்காளர்களை கொண்டிருந்த கோயமுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார், ’கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி’ என புகழப்படும்தி à®….ராமலிங்க செட்டியார். 

இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், போட்டியின்றி கோவையின் முதல் மக்களவை உறுப்பினரானார். போட்டியின்றி வென்ற காங்கிரஸ் கட்சியை, அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்றது, கம்யூனிஸ்ட் கட்சி.

தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...