2019 - கோவை தேர்தல் களம் : கோவையில் இருந்து ஒரு மத்தியமைச்சர்..!

கோவை : தமிழகத்தில் எத்தனை எத்தனையோ கட்சிகள் இருந்தாலும், தேர்தல் என்று வந்தால் திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில் தேசிய கட்சிகளின் ஆதிக்கமே கோலோச்சியுள்ளது.


கோவை : தமிழகத்தில் எத்தனை எத்தனையோ கட்சிகள் இருந்தாலும், தேர்தல் என்று வந்தால் திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில் தேசிய கட்சிகளின் ஆதிக்கமே கோலோச்சியுள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொடங்கி பா.ஜ.க. வரை இந்த ஆதிக்கம் நீடிக்கிறது. இதுவரை நடந்த 16 தேர்தல்களில் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் என 6 முறை வென்றுள்ளன. ஆனால், தனிப்பெரும் கட்சியாக வென்ற கட்சி என்றால், அது காங்கிரஸ் தான். ‘ஹாட்ரிக்’ வெற்றியோடு சேர்த்து 5 வெற்றிகளை தன்வசம் வைத்துள்ளது. தி.மு.க.,வும், பா.ஜ.க.வும் தலா 2 வெற்றிகள் கண்டுள்ளன. 

வந்தது தேர்தல், வென்றது காங்கிரஸ்…

அப்போது எல்லாம் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். உள்நாட்டு அரசியல், வெளிநாட்டு உறவு என பல சிக்கல்களுக்கு இடையே, 1962-ம் ஆண்டு 3-வது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

அப்போது, ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு பிரச்சனைகளில் சிக்கித் தவித்தது. காங்கிரஸ் கட்சியில் பிரிவு, சீனா உபயத்தினால் கம்யூனிஸ்ட் கட்சியில் குழப்பம், தி.மு.க.வில் பிளவு என இது தொடர்ந்தது. 

முதல் இரண்டு தேர்தல்களில் இருந்த இரட்டை உறுப்பினர் தொகுதி முறை நீக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான தனித்தொகுதி முறை வந்தது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்ட், ஜனசங்கம், பிராஜா சோஷலிஸ்ட் கட்சிகள் வரிசையில் புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருந்தது. அது காங்கிரஸ்காரராக இருந்த ராஜாஜியின், சுதந்தரா கட்சி.

நாட்டிற்காக செய்ததை சொல்லியும், செய்யப்போவதை சொல்லியும் வாக்கு கேட்பது காங்கிரசின் பாணி. காங்கிரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும், தொழிலாளர் நலன், உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதும் கம்யூனிஸ்ட்களின் பாணி. à®•ாமராசரின் சாதனைகளை சொல்லி சட்டமன்றத்துக்கும், நேருவின் சாதனைகளை சொல்லி நாடாளுமன்றத்துக்கும் வாக்குப் பெட்டிகளை நிரப்பி விடலாம் என்பது காங்கிரசின் உத்தியாக இருந்தது.அதேசமயம், பலம் பொருந்திய எதிர்க்கட்சிகள் இல்லை என்பது அக்கட்சிக்குப் பெறும் ஆறுதல். 

ஆனால், அந்த நிலையை தமிழக தேர்தல் களம் இந்த முறை மாற்றியது.தேர்தல் முடிவுகள் வந்த போது மீண்டும் வென்று, மூன்றாவது முறையாக பிரதமர் நேரு காங்கிரஸ் ஆட்சி அமைத்தார். வழக்கம் போல, எதிர்க்கட்சி வரிசையை கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்திருந்தது. அதேசமயம், குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, எதிர்க்கட்சி படை வரிசை பலம் பெருகியிருந்தது. 22 தொகுதிகளை வென்று ஆச்சரியப்படுத்திய ராஜாஜியின் சுதந்தரா கட்சிக்கு, சொந்த மண்ணான சென்னை மாகாணத்தில் பூஜ்ஜியம் மட்டுமே. சென்னை மாகாண சட்டமன்றத்தில் 3-வது முறையாக காமராசர் முதலமைச்சர் ஆனார். 

அந்த சமயத்தில், வடக்கத்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்திய தி.மு.க. 50 தொகுதிகளை வென்று, பலம் பொருந்திய எதிர்க்கட்சியாய் உருவெடுத்தது. 

மத்திய அமைச்சரான மண்ணின் மைந்தர் 

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியைக் கம்யூனிஸ்ட்களிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியது. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியின் முதல் பெண் எம்.பி.யான பார்வதி கிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை வெற்றி கைகூடவில்லை. காங்கிரஸ் கட்சி வேட்பாளரான பி.ஆர். ராமகிருஷ்ணன் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுதந்தரா கட்சி 3-ம் இடத்திற்கும், தி.மு.க. 4-ம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. 

அதேசமயம், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.சுப்பிரமணியம். மண்ணின் மைந்தரான சி.சுப்பிரமணியத்தை சொந்த ஊர் மக்கள், சுதந்தரா கட்சி வேட்பாளரான ராமசாமியை விட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்து அபார வெற்றி பெற வைத்தனர். நேரு அமைச்சரவையில் எக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக அவர் பதவியேற்றார். பின்னர், உணவுத்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் அடுத்தடுத்த காலங்களில் பணியாற்றியுள்ளார். பின்னாளில் பாரத ராத்னா விருது பெற்ற இவர், உணவு தன்னிறைவுக்கு காரணமான பசுமை புரட்சிக்கு வித்திட்டவர். அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதிலும், பரம்பிகுளம் - ஆழியாறு திட்டத்தை செயல்படுத்துவதிலும் சி.சுப்பிரமணியம் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கோவையை விரும்பும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டிகள் நிலவியிருக்கின்றன. பின்னாளில், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி ஆதரவோடும் வென்றுள்ளன. ஆனால், தி.மு.க.,வோ, அ.தி.மு.க.வோ குறிப்பிடும்படியான வெற்றிகளைப் பதிவு செய்யவில்லை. மற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க.விற்கு என்றுமே விருப்பமான தொகுதியாக கோயம்புத்தூர் தொகுதி இருக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளன. ஆனால், பா.ஜ.க. கூட்டணி பலத்தோடு மட்டுமே வெற்றி கண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை தன்வசம் வைத்திருந்தாலும், வெற்றியை எட்டி பிடிக்க வலுவான கூட்டணி பா.ஜ.க.விற்கு தேவைப்படுகிறது.

இன்றைய சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் தனித்துப் போட்டியிட்டு டெபாசிட் பெறுவதே கடினம். அதேசமயம், வெற்றிக்கு கைகொடுக்கும் துருப்பு சீட்டாகப் பயன்படும் இக்கட்சிகளுக்கு, கணிசமான வாக்கு வங்கி கொண்ட கோவை தொகுதியை ஒதுக்கி திராவிட கட்சிகள் கூட்டணி கணக்கை சரிசெய்து கொள்கின்றன. அவ்வகையில், காங்கிரஸ், பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி கட்சிகளிடம் போட்டியிட விரும்பி கேட்கும் தொகுதியாக, கோயமுத்தூர் இருந்து வருகிறது. 

எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் கோயம்புத்தூர் தொகுதியில் தேசிய கட்சிகளுக்கு இடையே தான் போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...