2019 - கோவை தேர்தல் களம்: வரலாற்றை மாற்றிய தேர்தல்!

இந்தியாவின் முதல் மூன்று பொதுத் தேர்தல்கள் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.


இந்தியாவின் முதல் மூன்று பொதுத் தேர்தல்கள் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நான்காவது பொதுத்தேர்தல் வரலாற்றையே மாற்றியமைத்தது. ஆம்… இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய தேர்தல் அது. 



1967 ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களை போல இந்த தேர்தல் இருக்கவில்லை. கட்சிகளும், காட்சிகளும் மாறியிருந்தன.சீனா போர் தோல்வி, பிரதமர் நேருவின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. à®†à®Ÿà¯à®šà®¿ பதவியில் இருந்து விலகி கட்சி பணியாற்றும் காமராசரின் ’கே பிளான்’ படி முதலமைச்சர் பதவியை துறந்திருந்தார். 



எதிர்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவிவகாரத்தினால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரண்டாக பிளவுபட்டது. 



சோஷலிஸ்ட் கட்சியோ,பிரஷா சோஷலிஸ்ட், சம்யுக்தா சோஷலிஸ்ட் என பிரிந்திருந்தது. காங்கிரசால் மட்டுமே நல்லாட்சியை தர முடியுமென பரப்புரை செய்த பிரதமர் இந்திரா காந்திக்கு தேர்தல் முடிவுகள் வந்த போது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

கடந்த தேர்தல்களை காட்டிலும் குறைவான தொகுதியில் வென்றிருந்தாலும், ஆட்சி கை நழுவி விடவில்லை.ஆனால் அதிர்ச்சி தந்தது, தமிழ்நாடு. தேர்தலை தீர்மானித்த மொழிப்போர் பெரியாரால் ’கண்ணீர் துளிகள்’ என விமர்சிக்கப்பட்ட திமுகவிற்கு ஆதரவாக இத்தேர்தலில் வீசிய ஆதரவு அலையில் அடித்து செல்லப்பட்ட அரசியல் தலைவர்களின் பட்டியல் நீளமானது. இத்தனைக்கும் உயிர் நாடி கொள்கையான ’திராவிட நாடு’ கொள்கையை, பிரிவினை தடை சட்டத்தினால் திமுக கைவிட்டிருந்தது. ஆனால் கைகொடுத்தது மொழிப்போர் ’கே பிளான்’ படி முதலமைச்சர் பதவியை துறந்த காமராசர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 



நேருவின் மறைவை தொடர்ந்து, பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி வந்திருந்தார்.மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். மத்திய அரசின் ஆட்சி மொழி சட்டத்தை அறிமுகப்படுத்திய லால் பகதூர் சாஸ்திரியிடமே பிரதமர் பதவி இருந்தால், மீண்டும் இந்தி திணிப்பு வேகமெடுத்தது.

கொதித்தெழுந்தது தமிழகம், வெடித்தது மொழிப்போர்..!



தீக்குளிப்புகள், உயிர் தியாகங்கள், சிறைவாசம் என மொழிப்போர் தியாகிகளால் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஐம்பது நாட்கள் நடைபெற்ற போராட்டங்களில் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அதேசமயம் பக்தவச்சலம் அரசு போராட்டக்காரர்களிடம் கெடுபிடி காட்டியது. அப்போது நடந்த ஒரு விநோதம் கவனிக்கத்தக்கது. 



இந்திக்கு எதிராக கொடி பிடித்தார், இதற்கு முன்னர் இந்தியை திணிக்க முயன்ற ராஜாஜி. இந்தி எதிர்ப்பில் தீவிரமாக இருந்த பெரியார் இம்முறை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, ஆதரவும் தெரிவிக்கவில்லை. மாறாக திமுகவையும், சுதந்தரா கட்சியையும் தடை செய்ய வேண்டுமெனவும், மத்திய அரசு முறையாக விளக்கமளிக்க வேண்டுமெனவும் கூறினார். இந்தி திணிப்பை எதிர்த்து பதவி விலகினார், மத்திய அமைச்சரான சி.சுப்பிரமணியம். பின்னர் பிரதமர் கேட்டு கொண்டதால் அதனை வாபஸ் பெற்றார். 

மொழிப்போர், அரிசி தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவை தேர்தலில் முக்கிய பிரச்சணைகளாக ஏதிரொலித்தன. திமுக, சுதந்தரா, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வார்டு ப்ளாக், மா.பொ.சியின் தமிழரசு கழகம், முஸ்லீம் லீக், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, பிரஷா சோஷலிஸ்ட் கட்சி, என வலுவான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொண்டார், அண்ணா. 



ரூபாய்க்கு ”மூன்றுபடி அரிசி இலட்சியம், ஒருபடி அரிசி நிச்சயம்” என்ற அண்ணாவின் வாக்குறுதியும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த எம்.ஜி.ஆரின் புகைப்படம் கொண்ட சுவரொட்டிகளும் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. à®¤à¯‡à®°à¯à®¤à®²à¯ முடிவுகள் வந்தபோது, அதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசைக்கு வந்தது. கடந்த தேர்தலில் பலம் பொருந்திய எதிர்கட்சியாக உருவெடுத்திருந்த திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. 

ஒரு மாநில கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடித்ததும், காமராசர் சொந்த ஊர் மக்களால் தோற்கடிக்கப்பட்டதும், இந்த தேர்தலில் தான். உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் விருப்பப்படி, மெட்ராஸ் மாகாணத்திற்கு ’தமிழ்நாடு’ என முதலமைச்சர் அண்ணா பெயர் மாற்றினார். கூடவே தமிழ்நாட்டின் தலை எழுத்தையும் மாற்றி அமைத்தார்.



கோவையை கைப்பற்றிய இடதுசாரிகள் 

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கும், சட்டமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுக்கும் மக்கள் அதிகளவில் வாக்களிக்க விரும்பும் நடைமுறை இன்று வரை இருந்து வருகிறது. ஆனால், இத்தேர்தல் அதற்கும் விதிவிலக்காக அமைந்தது. இதற்கு முன்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் அதிக இடங்களை கைப்பற்றியகாங்கிரஸ் கட்சிக்கு, வெறும் 3 இடங்களை மட்டுமே கிடைத்தது. தனித்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பூஜ்யம். திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. 



கோயம்புத்தூர் நாடாளுமன்றதொகுதியை இடதுசாரி கட்சிகளில் ஒன்றான மார்சிஸ்ட் கம்யூனிட் கட்சி முதல் முறையாக கைப்பற்றியது. சிபிஎம் வேட்பாளர் கே.ரமணி சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளரான நா.மகாலிங்கத்தை தோற்கடித்தார். கடந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற சி.சுப்பிரமணியம், கோபிசெட்டிப்பாளையம் மக்களவை தொகுதியில் தோல்வி கண்டார். 



கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களாக தொழிலதிபர்களை நிறுத்துவது வழக்கம். அதேசமயம் தொழிலாளர்களின்பிரதிநிதிகளான தொழிற்சங்கவாதிகளை நிறுத்துவது கம்யூனிஸ்ட்களின் பழக்கம். இரு தரப்பும் மாறி, மாறி வெற்றி பெறுவதும் வழக்கம். இந்த நடைமுறை பல காலங்களுக்கு நீடித்தது. 

இன்றைய காலங்களில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூட்டணி சேர்ந்தாலும், தனித்து நின்றாலும் ஒன்றாகவே தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றன. அன்றைய காலங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாக மோதியதும் உண்டு. அப்படி அடுத்து வந்த தேர்தலில் இரு கட்சிகளும் நேரடியாக மோதிக்கொண்ட களமாக கோவை தொகுதி இருந்தது.

தொடரும்… 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...