2019 - கோவை தேர்தல் களம்: மோதிக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள்!

கோவை: பொதுத்தளத்திலும், தேர்தல் களத்திலும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று செயல்படுகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் இணைய வேண்டுமென்பது நல்லக்கண்ணு போன்றோரின் விருப்பமாக உள்ளது


கோவை: à®ªà¯Šà®¤à¯à®¤à¯à®¤à®³à®¤à¯à®¤à®¿à®²à¯à®®à¯, தேர்தல் களத்திலும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று செயல்படுகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் இணைய வேண்டுமென்பது நல்லக்கண்ணு போன்றோரின் விருப்பமாக உள்ளது. ஆனால் ஒரு கால கட்டத்தில் கூட்டணியிலும், நிலைப்பாட்டிலும் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுத்தன. ஏதிரெதிராக நின்ற இரு கட்சிகளும் நேரடியாக ஐந்தாவது பொதுத்தேர்தலில் மோதிக்கொண்ட களமாக கோவை இருந்தது.  

முன்கூட்டியே வந்த தேர்தல்




5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வந்த பொத்தேர்தல் இந்த முறை 4 வது ஆண்டிலேயே வந்தது. 1971 ம் ஆண்டில் நாடாளுமன்றத்தும், தமிழக சட்டமன்றத்துக்கும் ஐந்தாவது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரே காரணம், இந்திரா காந்தி.



இந்தியா - சீனா போரின் விளைவாக 1964 ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. பி.டி.ரணதிவே தலைமையிலான பிரிவு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனவும், எஸ்.ஏ.டாங்கே தலைமையிலான பிரிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எனவும் இரு பிரிவுகளாக செயல்பட துவங்கியது. பொதுத்தளத்திலும், தேர்தல் களத்திலும் இரண்டு கட்சிகளும் மோதிக்கொண்டதோடு, பரஸ்பரம் இரு தரப்பும் குற்றச்சாட்டி கொண்டனர்.



இதேபோல காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாக பிளவுப்பட்டிருந்தது. இந்திரா காந்தி ஆதரவாளர்கள் நிறைந்த இந்திரா காங்கிரசின் மாநில தலைவரானார், சி.சுப்பிரமணியம். பழைய தலைவர்கள் நிரம்பிய ஸ்தாபன காங்கிரஸ் காமராசர் வழிகாட்டுதலோடு, பா.ராமசந்திரன் தலைமையில் தமிழகத்தில் இயங்கியது. 



தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணா மறைவை தொடந்து, கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். 



மன்னர் மானிய ஒழிப்பு சட்டம் மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது. குடியரசு தலைவர் வெளியிட்ட அவசர ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. இதன்விளைவாக ’மைனாரிட்டி அரசை’ கலைத்து விட்டு, மக்களின் ஆதரவை பெரும் வகையில் விரைவில் தேர்தல் என அறிவித்தார், பிரதமர் இந்திரா காந்தி. 



தனித்து போட்டியிட்டால் தனித்து விடப்படுவோம் என்பதால் இந்திரா காந்தி வலுவான கூட்டணி அமைக்க முயன்றார். இந்திரா எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சுதந்தரா கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்திருந்தன. இந்திராவை வெளியேற்றுவோம் என்றனர், எதிர்கட்சிகள். வறுமையை வெளியேற்றுவதே இலக்கு என்றார், இந்திரா காந்தி. 

கூட்டணி கணக்கு

மத்திய இந்திரா காங்கிரஸ் அரசும், மாநில திமுக அரசும் இணக்கமாக இருந்தன. வங்கிகள் தேசியமயம், மன்னர் மானிய ஒழிப்பு உள்ளிட்டவைக்கு ஆதரவு, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு என திமுக ஆதரவு கரம் நீட்டியது. அதற்கேற்ப ஒராண்டிற்கு முன்னரே சட்டமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு தயாரானது. 



காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த திமுக, காங்கிரசின் ஒரு பிரிவான இந்திரா காங்கிரசோடு தேர்தல் கூட்டணி வைத்து ஆச்சரியப்படுத்தியது. அதேசமயம் இந்திரா காங்கிரஸ்க்கு அதிர்ச்சியும் கொடுத்தது.

வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டுமென்பது அண்ணா காலத்தில் இருந்து திமுக கடைபிடிக்கப்படும் நடைமுறை. அதற்கேற்ப இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஷா சோஷலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழரசு கழகம், பார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்தது. இந்திரா காங்கிரஸ்க்கு மக்களவை தேர்தலில் கூட்டணியில் 10 தொகுதிகளை ஒதுக்கிய திமுக, சட்டமன்றத்துக்கு ஒரு தொகுதிகள் கூட ஒதுக்காமல் அதிர்ச்சி கொடுத்தது. இருப்பினும் கூட்டணி தொடர்ந்தது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வந்திருந்தது. 

இதனால் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து களம் கண்டது. 

எதிர்தரப்பில் ஸ்தாபன காங்கிரஸ், சுதந்தரா கட்சி, குடியரசு கட்சி, உழைப்பாளர் கட்சி, சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி என கூட்டணி உருவாகியிருந்தது.தேர்தல் முடிவுகளின் படி இந்திரா காங்கிரஸ் வென்றது, இல்லை. வென்றார், இந்திரா காந்தி. தமிழகத்திலும் திமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. சட்டமன்றத்திலும் கடந்த தேர்தலை காட்டிலும் திமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 



மோதிக்கொண்ட இடதுசாரிகள்

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இம்முறை பாலதண்டாயுதம் வேட்பாளர். கடந்த தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.ரமணி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர். ஆனால், இம்முறை தனித்து போட்டி. இதனிடையே ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் ராமசாமி நிறுத்தப்பட்டார். மும்முனை போட்டி நிலவியது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நேரடியாக மோதிக்கொள்வதால் வாக்குகள் சிதறும் எனவும், வெற்றி கேள்விக்குள்ளாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியும் இரண்டாக பிளவுபட்டிருந்தது. இதனால் கூட்டணி பலத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

பாலதண்டாயுதம் 77 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமசாமியை தோற்கடித்தார். 



ஆனால் கடந்த தேர்தலில் வென்ற கே.ரமணிக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. இதையடுத்து வந்த 1974 இடைத்தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்வதி கிருஷ்ணன், அதிமுக ஆதரவோடு வெற்றி பெற்றார். 

நான்காவது ஆண்டிலேயே ஐந்தாவது பொதுத்தேர்தல் வந்தாலும், அடுத்த தேர்தல் வர ஆறு ஆண்டுகளானது. அதுமட்டுமின்றி இந்த தேர்தல் தந்த பெரும்பான்மை வெற்றி, அடுத்து வந்த பெறும் சறுக்கலுக்கு அடிப்படை. மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் எந்த மாற்றமும் கோவையில் இருக்கவில்லை. 

தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...