2019 - கோவை தேர்தல் களம் : (10) வெற்றிக்கு உதவிய ’ரஜினி வாய்ஸ்’

நாடாளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சிகளுக்கும், சட்டமன்ற தேர்தல்களில் மாநில கட்சிகளுக்கும் அதிக இடங்களை ஒதுக்குவது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்கு.


நாடாளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சிகளுக்கும், சட்டமன்ற தேர்தல்களில் மாநில கட்சிகளுக்கும் அதிக இடங்களை ஒதுக்குவது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்கு. அதேபோல, மத்தியில் ஆளும் கட்சியோடு, மாநில ஆளும் கட்சிகளும், மத்திய, மாநில எதிர்கட்சிகளும் கை கோர்த்து தேர்தலை எதிர்கொள்வது, காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை. இந்த நடைமுறை 1996 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவை தந்தது. 

நான்கு முனை போட்டி :



நேரு பரம்பரையில் இருந்து வந்த இந்திரா காந்தியையும், ராஜீவ் காந்தியையும் பத்தாண்டு கால இடைவெளிக்குள் காங்கிரஸ் கட்சி இழந்தது. இந்த இரு இழப்புகளும் அடுத்து வந்த தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியை பெரும் வெற்றிகளைப் பெற்று ஆட்சியை பிடிக்க காரணமாகவும் இருந்தன. ராஜீவ்காந்தி அனுதாப அலையில், 1991-ல் காங்கிரஸ் கட்சி மத்தியிலும், à®….தி.மு.க. மாநிலத்திலும் ஆட்சியை பிடித்தன. 



இந்த கூட்டணி அடுத்து வந்த 1996-ம் ஆண்டு தேர்தலிலும் தொடர வேண்டுமென காங்கிரஸ் தலைவராக இருந்த நரசிம்மராவ் விரும்பினார். இதனால், அதிருப்தி அடைந்த கருப்பையா மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவக்கி, தி.மு.க.வோடு கூட்டணி அமைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இக்கூட்டணியில் சேர்ந்தது.



வை.கோபால்சாமி என்கிற வைகோ தி.மு.க.வில் செங்குத்தான பிளவை ஏற்படுத்தியிருந்தார். கொலைபழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட வைகோவிற்கு ஆதரவாக 3 பேர் தீக்குளித்து மாண்டனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கிய வைகோவின் பக்கம், 9 தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வந்திருந்தனர். எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் இருந்து விலகிய போது கூட இவ்வளவு பேர் வெளியேறவில்லை. 



வைகோவிற்கு ஆதரவாக வந்தவர்களில் ஓரிருவரைத் தவிர, மற்றவர்கள் பின்னாளில் தி.மு.க.வில் ஐக்கியமானதும், ”தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்” என யாரை எதிர்த்து அரசியல் களம் கண்டாரோ, அவரையே முதல்வராக்குவேன் என சபதமேற்றிருப்பதும் வரலாற்று விநோதம். தி.மு.க. கொடிக்கும், உதய சூரியன் சின்னத்திற்கும் உரிமை கோரினார் வைகோ. அவை கிடைக்காத நிலையில், குடை சின்னத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி அமைத்தார்.



ஆளும் அ.தி.மு.க. மீது மக்களிடம் கடும் அதிருப்தி. அடுத்தடுத்து ஊழல் புகார். உள்கட்சி எதிர்ப்பை மீறி, அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. பாட்டாளி மக்கள் கட்சி 12 கட்சிகளை கொண்ட ஊழல் ஒழிப்பு - சமூக நிதி முன்னணியை உருவாக்கியது. தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி உருவானது. தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க.விற்கு இடையே போட்டி நிலவியது.

வெற்றிக்கு உதவிய ’ரஜினி வாய்ஸ்’



”ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்றார் நடிகர் ரஜினிகாந்த். தி.மு.க., த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவும் அளித்தார். அப்போதில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்திற்காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வந்த போது தமிழகத்தில் காங்கிரஸ், à®….தி.மு.க. கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.  à®¤à®¿.மு.க., த.மா.கா கூட்டணி அபார வெற்றி பெற்றது. à®®.தி.மு.க, பா.à®®.க.வால் ஒரு மக்களவை தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. ஏன்..? வைகோ தனது சொந்த தொகுதியான சிவகாசியில் தோல்வியடைந்தார்.

தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக இருந்த பா.ஜ.க. சார்பில், பிரதமராகப் பதவியேற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் 13 நாளில் பதவியை இழந்தார்.



இடதுசாரிகள், ஜனதா தளம், மாநில கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணியை உருவாக்கின. மேற்கு வங்க முதல்வராக இருந்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவிற்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆனால், கட்சி பொலிட் பியூரோ முடிவை ஏற்க மறுத்ததோடு, அமைச்சரவையிலும் இடம் பெறாமல், அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் என அறிவித்தது. பின்னாளில் “மார்க்சிஸ்டுகளுக்கு கிடைத்த வாய்ப்பை புறக்கணித்தது மாபெரும் வரலாற்றுப் பிழை” என்றார் ஜோதிபாசு. 



ஆனால், மற்றொரு இடதுசாரி கட்சியான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றது. உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்திரஜித் குப்தா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முதல் மத்திய அமைச்சரானர். பிரதமர் பதவிக்கு மூப்பனார் உள்ளிட்டோர் பெயர் பரிசீலிக்கப்பட்டாலும், தேவகெளடா பிரதமரானர். 



கோவையில் காங்கிரசின் இமாலய தோல்வி 

அ.தி.மு.க கூட்டணி பலத்தோடு, தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களில் வென்றிருந்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசங்களில் வெற்றியைப் பதிவு செய்திருந்தார் சி.கே.குப்புசாமி. மீண்டும் அதே கூட்டணி, அதே வேட்பாளர். ஆனால் இமாலய தோல்வி காத்திருந்தது.



முதல் முறையாக தேர்தல் களம் கண்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராசன், 85 ஆயிரத்து 355 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அ.தி.மு.க. கூட்டணியோடு கடந்த தேர்தல்களில் அபார வெற்றி பெற்ற சி.கே.குப்புசாமிக்கு, இம்முறை இரண்டாம் இடமே கிடைத்தது. அதுவும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 787 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மு.ராமநாதன் 4இலட்சத்து 63 ஆயிரத்து 807 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.



கோயமுத்தூர் தொகுதியின் அடுத்த தேர்தல் களம் நாட்டையே உலுக்கியது. அரசியல் களத்தை அதிர்ச்சியில் உறைந்து போகச்செய்த அச்சம்பவம், தேர்தல் களத்திலும் பலமாக எதிரொலித்தது.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...