2019 - கோவை தேர்தல் களம் : கோவையில் பாஜக வென்ற கதை

அன்று பிப்ரவரி 14, 1998 காதலர் தினம். காதலர் தினம் ஒரு பக்கம், அடுத்து சில நாட்களில் நடைபெற உள்ள 12 வது நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மறுபக்கம் என நாடே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அத்தனையையும் உறைய செய்யும் வகையில் கோவையில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நாட்டையே உலுக்கிய இச்சம்பவம், தேர்தல் களத்திலும் பலமாக எதிரொலித்தது.



அன்று பிப்ரவரி 14, 1998 காதலர் தினம். காதலர் தினம் ஒரு பக்கம், அடுத்து சில நாட்களில் நடைபெற உள்ள 12 வது நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மறுபக்கம் என நாடே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அத்தனையையும் உறைய செய்யும் வகையில் கோவையில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நாட்டையே உலுக்கிய இச்சம்பவம், தேர்தல் களத்திலும் பலமாக எதிரொலித்தது.



கோவையில் பாஜக

1984 ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி முதல் முறையாக தேர்தல் களம் கண்டது. அப்போது கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சி போட்டியிடவில்லை. அடுத்து வந்த 1989 ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நாராயணன் 25 ஆயிரத்து 132 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். அத்தேர்தலில் பாஜக கோவையில் பெற்ற வாக்கு சதவீதம் 3.34 ஆக இருந்தது. இதையடுத்து வந்த 1991 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட நாராயணன் 47 ஆயிரத்து 267 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்தார். அதேசமயம் வாக்கு சதவீதம் என்பது 6.78 சதவீதமாக அதிகரித்து இருந்தது. 1996 தேர்தலில் பாஜக வேட்பாளர் கே.எஸ்.நடராசன் 43 ஆயிரத்து 289 வாக்குகள் பெற்றார். திமுக - தமாகா, காங்கிரஸ் - அதிமுக, மதிமுக - மார்க்சிஸ்ட் என கூட்டணி போட்டிகளுக்கிடையே, 5.30 சதவீத வாக்குகளோடு நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

1990 களுக்கு பிறகு தேசிய அளவிலும், கோவையிலும் பாஜக வளர்ச்சி பெற துவங்கியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி செல்வாக்கு மிக்க தலைவர்களை இழந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்திற்கு பிறகு பாஜக அசுர வளர்ச்சி பெற்றது. அதேசமயம் கோவையில் ஒரு நிலையான வளர்ச்சியை பாஜக பெற்றுக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு சரியான மாற்று, இந்துத்துவா கொள்கைகள், வலதுசாரி சிந்தனை ஆகியவற்றை முன்வைத்த பாஜகவிற்கு ஆதரவு பெருகி வந்தது. குறிப்பாக முதலாளிகள் ஆதரவு பாஜகவிற்கு தொடர்ந்து இருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு பதிலாக முதலாளிகள் பலரும் பாஜகவை விரும்பினர்.



12 வது மக்களவை தேர்தல் களம்

1996 ம் ஆண்டு தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக பாஜக உருவெடுத்த போதும், அருதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்களை நாடு சந்தித்தது. பதவியேற்ற 13 நாளிலேயே பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை இழந்தார், அடல் பிஹாரி வாஜ்பாய். 



அடுத்து வந்த ஐக்கிய முன்னணியின் பிரதமர் தேவகெளடாவிற்கு கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்ப பெற, ஐ.கே.குஜ்ரால் பிரதமராக பொறுப்பேற்றார். அவருக்கும் சிக்கல் வந்தது. ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான ஜெயின் கமிசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட, திமுகவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென காங்கிரஸ் கோரியது. அதனை குஜ்ரால் ஏற்காத நிலையில் ஆதரவை திரும்ப பெற்று ஆட்சியை கவிழ்த்தது, காங்கிரஸ்.



1998 ம் ஆண்டு பிப்ரவரியில் 12 வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏக உற்சாகத்துடன் களமிறங்கிய பாஜக, ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டது. பல கட்சிகளை கொண்ட வலுவான கூட்டணியை அமைக்க பாஜக முயன்றது. தமிழகத்தில் மதவாத கட்சி என ஒதுக்கி வைக்கப்பட்ட பாஜகவோடு, பல திராவிட கட்சிகள் முதல் முறையாக கூட்டணியில் சேர்ந்தன. பாஜகவோடு கூட்டணி அமைத்த முதல் திராவிட கட்சி, அதிமுக. பாஜக வளர்ச்சிக்கு அதுவே அடிப்படை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையும் அக்கூட்டணியில் இணைந்தன. நெருடல்களுக்கு இடையே தொடர்ந்த திமுக, தமாகா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்தது. இரண்டு தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. எம்.ஜி.ஆருடன் திருநாவுக்கரசு இருந்த காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. தேர்தல் களம் பரப்பாக இயங்கி கொண்டிருந்த வேளையில், அத்தனையையும் உறையச் செய்யும் நிகழ்வுகள் கோவையில் நடந்தேறின.



குண்டு வெடிப்பு தினமான காதலர் தினம்

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது அதிமுகவின் வழக்கம். அதன்படி கோவை தொகுதியை பெற்றது, பாஜக. வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறங்கினார். திமுக சார்பில் கா.ரா.சுப்பையனும், காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணனும் போட்டியிட்டனர். பிப்ரவரி 14 ம் தேதி ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. பாஜக மூத்த தலைவர் அத்வானி, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை செய்ய இருந்தார். ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 58 பேர் கொல்லப்பட்டனர்.



அத்வானியைக் கொலை செய்யும் நோக்கில் அல்உம்மா அமைப்பினர் இந்த குண்டு வெடிப்பு சம்பங்களை நிகழ்த்தினர். காவலர் செல்வராஜ் கொலையை தொடர்ந்து 1997 நவம்பரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு, பழி வாங்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இது தேர்தல் களத்தில் பாஜகவிற்கு ஆதரவாக அமைந்தது. 

குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த 14 வது நாளில் திட்டமிட்டபடி தேர்தல் நடந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை, மதரீதியான உணர்வுகளோடு, கூட்டணி வாக்குகள், திமுக மீதான அதிருப்தி ஆகியவை சேர பாஜக வெற்றிக்கு வழிவகுத்தது. பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 269 வாக்குகள் பெற்று, ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 676 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக கோயமுத்தூர், நீலகிரி, திருச்சி ஆகிய 3 இடங்களில் வெற்றி பெற்றது.



இந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தி தனிப்பெரும் கட்சியாக வளர்ந்த பாஜக, ஆட்சியமைக்க அதன் உயிர்நாடி கொள்கைகளான அயோத்தி ராமர் கோவில், பொதுச்சிவில் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து ஆகியவற்றை கைவிட்டது. குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையில் ஆட்சியமைத்தார், வாஜ்பாய். முதல்முறை 13 நாளில் கவிழ்ந்த பாஜக ஆட்சி, இம்முறை 13 மாதங்களில் கவிழ்ந்தது. 



கோவை குண்டு வெடிப்புகளினால் மக்களின் மனதில் குடி கொண்டிருந்த கொந்தளிப்பு நிலையை மாற்ற வேண்டுமென, அமைதியான கோவை என்ற முழக்கத்தை முன்வைத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கியது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மக்களால் அறியப்பட்ட நல்லக்கண்ணு முகத்தை, மத உணர்வுகள் மறக்கடிக்க காத்திருந்தது.



தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...