2019 - கோவை தேர்தல் களம் நல்லகண்ணு கோவையில் போட்டியிட்ட கதை

2019 - கோவை தேர்தல் களம் நல்லகண்ணு கோவையில் போட்டியிட்ட கதை


நல்லகண்ணு. “நல்ல மனிதர், எளிமையான, நேர்மையான மனிதர். மக்களுக்காக வயதான காலத்திலும் போராடுபவர்” என்பது அவரைப் பற்றி கேட்டால் எவரும் சொல்லும் வார்த்தைகள். இவை எதிர்கட்சிகள் கூட போற்றும் பண்புகளாக இருப்பவை. நல்லகண்ணுவை தெரியாத கோவைவாசிகள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நல்லகண்ணு கோவையில் தேர்தலில் போட்டியிட்டது தெரியுமா? என்றால் பலரும் தெரிந்திருப்பதில்லை.

தேநீர் விருந்தில் கவிழ்ந்த ஆட்சி



1998 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜக, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இரண்டாவது முறையாக பிரதமரானர், அடல் பிஹாரி வாஜ்பாய். ஆனால் கொஞ்ச நாளிலே ஆட்சி ஆட்டம் காண துவங்கியது. 



கூட்டணியில் இருந்த அதிமுக ஆட்டி படைத்தது. திமுக ஆட்சியை கலைக்க வேண்டுமென்றார், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க தயங்கியது, மத்திய பாஜக அரசு. விளைவு, ஆட்சியை கவிழ்த்தார் ஜெயலலிதா.

அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஒரு தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் பாஜகவிற்கு எதிரான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 



அதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முக்கியமானவர்கள். இருவரும் சந்தித்து கொண்ட சில நாட்களில் ஆட்சி கவிழ்ப்பிற்கான ஏற்பாடுகள் தயாராகின. 



ஆதரவை திரும்ப பெற்றார், ஜெயலலிதா. பெரும்பான்மை நிரூபிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில்13 மாத கால வாஜ்பாய் அரசு பெரும்பான்மை இன்றி கவிழ்ந்தது. அடுத்த தேர்தல் வரை‘காபந்துஅரசு’ நடந்தது. 

பிரதமராக வாஜ்பாய் நீடித்தார் அனுதாப அலையும், ஆதரவு அலையும்

ஜெயலலிதா 13 மாதத்தில் ஆட்சியை கவிழ்த்தது மக்களிடம் அனுதாப அலையை ஏற்படுத்தியது. ‘காபந்து ஆட்சி’ காலத்தில் ஆதரவு அலை பெருக, பாகிஸ்தான் கை கொடுத்தது. கார்கில் போர் மூலமாக… கார்கில் போரில் இந்தியாவின் அபார வெற்றி பாஜகவிற்கு ஆதரவான மனநிலையைஉருவாக்கியது. அனுதாப அலையோடு, ஆதரவு அலையும் சேர்ந்திருந்த நிலையில்13 வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது.



பாஜக ஆட்சியை பிடிக்கவும், கவிழவும் காரணமாக இருந்தார், ஜெயலலிதா. இம்முறை அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன. அதேசமயம் பாஜகவும் தமிழகத்தில் வலுவான கூட்டணியோடு களமிறங்கியது.

பாஜக கூட்டணியில் திமுக



பாஜக கூட்டணியில் கடந்த தேர்தலில் இடம் பெற்றிருந்த மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இத்தேர்தலிலும் நீடித்தது. ஒரேயொரு மாற்றம். அதிமுக இருந்த இடத்திற்கு திமுக வந்திருந்தது. இதில் இரண்டு ஆச்சரியங்கள் அடங்கியிருக்கிறது. ஒன்று, இந்துத்துவா கொள்கையை முன்னிறுத்திய பாஜகவோடு, அதற்கு நேரெதிரான திராவிட கொள்கையை முன்னிறுத்திய திமுக கூட்டணியில் சேர்ந்து ஆச்சரியமளித்தது. 



திமுக ஆட்சியை கவிழ்க்காதற்கு நன்றி கடனாய் கை கோர்த்து தேர்தலை சந்தித்தது. இன்னொன்று, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, திமுகவிற்கு சொந்தம் கொண்டாடிய வைகோ, திமுகவோடு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோ விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளோடு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள தயாரானது.

’அமைதியான கோவை’ முழக்கம் 



கோவை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து ஒராண்டு கடந்து இருந்தாலும், மக்களிடம் கொதிப்பான மனநிலை மாறவில்லை. பதட்டமும், பயமும் மக்கள் மனதில் குடி கொண்டிருந்தன. 1998 தேர்தலில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற குண்டு வெடிப்பினால் உருவான மனநிலையும், அதிமுக வாக்கு வங்கியும் அடிப்படை காரணங்கள். ஒராண்டில் மீண்டும் தேர்தல் வந்த போதும், மக்களின் மனநிலை பெரிதாக மாறியிருக்கவில்லை. 



திமுக கூட்டணியில் பாஜக மீண்டும் போட்டியிட்டார். சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

அதிமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை பெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கோவையும் ஒன்று. அதற்கு காரணமும் இருந்தது. மத உணர்வுகளும், கசப்பான மனநிலையும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலகட்டம். அவற்றை மாற்றி அமைதியை திரும்ப உருவாக்க வேண்டியிருந்தது. அதன்படி“அமைதியான கோவை”என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் களத்தை சந்தித்தது கம்யூனிஸ்ட் கட்சி.

மத உணர்வுகளை கடந்து அமைதியை உருவாக்க மக்கள் அறிந்த முகம் தேவையாக இருந்தது. அது நல்லகண்ணுவிற்கு சரியாக பொருந்தியது. வலிமையான கூட்டணியின் நல்ல வேட்பாளர் என நல்லகண்ணு பார்க்கப்பட்டார். அதற்கு தொழிற்சங்க பலமுள்ள பகுதி. கம்யூனிஸ்ட்களுக்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள தொகுதி. அதிமுக, காங்கிரஸ் கூட்டணி வாக்குகள். மக்கள் அறிந்த தலைவர். நல்லகண்ணுவே வெற்றி பெறுவார் என கருத்துகணிப்புகள் சொன்னது. அத்தனையும் பொய்யாக்கி மீண்டும் வென்றது, பாஜக.

நல்லகண்ணு தோற்ற கதை

தேர்தல் களத்தில் அனல் பறந்தது. வாஜ்பாய் ஆட்சி கவிழ்ப்பு, கார்கில் வெற்றி ஆகியவை நாடு முழுவதும் பாஜகவிற்கு ஆதரவு அலைவீசியது. அவற்றோடு கோவையில் மத உணர்வுகளும் சேர்ந்து கொண்டது. குண்டுவெடிப்பை மையப்படுத்தி பாஜக பரப்புரை செய்தது. 

தேர்தலுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும் நிலையில், நல்லகண்ணுவிற்கு இஸ்லாமிய அமைப்புகள் அளித்த ஆதரவை மையப்படுத்தி பாஜக ஒரு யுக்தியை கையாண்டது. ‘நல்லகண்ணு நல்லவர் தான். ஆனால் அவர் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் ஜெயித்தால் மீண்டும் குண்டுகள் வெடிக்கும்”, “தீவிரவாதத்தை ஒடுக்க பாஜக ஜெயிக்க வேண்டும்” என பாஜக பரப்புரை செய்தது. வீடுதோறும் கதவுகளில் பாஜகவின் இந்த நோட்டீஸ் மின்னியது. 



இந்த பரப்புரையை முறியடிக்க முடியாமல் கம்யூனிஸ்ட்கள் திணறினர். இதற்கு பதிலடி கொடுக்க அவர்கள் முயன்ற போது, காலம் கை மீறி போயிருந்தது. தேர்தல் நெருங்கியது. மத உணர்வுகள் நல்லகண்ணு என்ற முகம் போட்டியிட்டதை மறக்கடித்தது. அதனைதாண்டி கம்யூனிஸ்ட்களும் நல்லகண்ணுவை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை. மத உணர்வை தூண்டி வாக்கு கேட்டதாகவும், கோவில்களை பரப்புரை தளமாக பயன்படுத்தியதாக கம்யூனிஸ்ட்கள் குற்றம்சாட்டினர். ஆனால் அவை தேர்தல் களத்தில் எடுபடவில்லை.



தேர்தல் முடிவுகளின் படி மீண்டும் வென்றார், சி.பி.ராதாகிருஷ்ணன். அதிர்ச்சியளிக்கும் விதமாக நல்லகண்ணு 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சி.பி.ராதாகிருஷ்ணன் 4 இலட்சத்து 30 ஆயிரத்து 68 வாக்குகளும், நல்லகண்ணு 3 இலட்சத்து 75 ஆயிரத்து 991 வாக்குகளும் பெற்றனர். ஆனால் கடந்த தேர்தலில் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 676 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், 54 ஆயிரத்து 77 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். இது கடந்த தேர்தலை காட்டிலும் 90 ஆயிரத்து 599 வாக்குகள் குறைவு. 



இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெறும் 2 ஆயிரத்து 866 வாக்குகள் பெற்று 7 ம் இடம் பெற்றார்.

நல்லகண்ணு போட்டியிட்ட எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றது இல்லை என்பதே வரலாறு. அவ்வகையில் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிந்த ஒரு பெருந்தலைவரை கோவை மக்களும் அரவணைக்க தவறிவிட்டனர்.

தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...