2019 - கோவை தேர்தல் களம்: பாஜக தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த கம்யூனிஸ்ட்கள்

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத வேறு எந்த கட்சியும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய முடியாது, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான ஆட்சி தர முடியும் என்ற கூற்று பல காலமாக சொல்லப்பட்டு வந்தது. அதற்கேற்பவே வரலாறும், தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. இதனை உடைத்தது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. 1999 தேர்தலுக்கு பிறகு, கூட்டணி கட்சிகள் ஆதரவோடு ஐந்து ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்தது. 1998 மற்றும் 1999 தேர்தல் வெற்றிகளோடு தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்தார், அடல் பிஹாரி வாஜ்பாய்.


சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத வேறு எந்த கட்சியும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய முடியாது, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான ஆட்சி தர முடியும் என்ற கூற்று பல காலமாக சொல்லப்பட்டு வந்தது. அதற்கேற்பவே வரலாறும், தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. இதனை உடைத்தது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. 1999 தேர்தலுக்கு பிறகு, கூட்டணி கட்சிகள் ஆதரவோடு ஐந்து ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்தது. 1998 மற்றும் 1999 தேர்தல் வெற்றிகளோடு தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்தார், அடல் பிஹாரி வாஜ்பாய். 



இந்த ஆறு ஆண்டுகளில் சறுக்கல்களும், சாதனைகளும் கலந்தே இருந்தன. ஊழல் புகார்கள், குஜராத் கலவரம், பொடா சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் சறுக்கலுக்கு காரணமாக இருந்தன. பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தங்க நாற்கர சாலை திட்டம் போன்றவற்றை சாதனைகளாக சொன்னது, பாஜக. தேர்தலை முன்கூட்டியே சந்திக்க தயாரான பாஜக, “இந்தியா ஒளிர்கிறது” என்ற முழக்கத்தை முன்வைத்து சாதனைகளை விளம்பரப்படுத்தியது.



14 வது மக்களவை தேர்தல் களம்

தனிக்கட்சி ஆட்சி என்பதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. 1996. 1998, 1999 ஆகிய தேர்தல் தோல்விகளுக்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றியது காங்கிரஸ். அதற்கேற்ப காங்கிரஸ் ஒரு மந்திர வார்த்தையை உதிர்த்தது. அது, கூட்டணி அரசு. கூட்டணி அமைச்சரவை அரசியல் கட்சிகளை மட்டுமின்றி, ஆட்சியையும் தன்பக்கம் கொண்டு வந்து சேர்க்குமென நம்பியது. அதன்படி பல கட்சிகள் காங்கிரஸ் பக்கம் அணி திரண்டன. தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் பாஜக பக்கம் இருந்த கட்சிகள், எதிர்பக்கம் சேர்ந்தன. எதிர்பக்கம் இருந்த கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தன. 



வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்து, அமைச்சரவையிலும் அங்கம் வகித்து வந்த திமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியோடு போட்டியிட்ட திமுக, படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. அதேசமயம் பாஜகவிற்கு முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தன. ஆனால் ஆளுங்கட்சியான அதிமுகவோடு பாஜக நட்பு பாராட்டியது. இதற்கிடையே ராமர் கோவில், பொதுச்சிவில்சட்டம், பசுவதை சட்டம் ஆகிய விவகாரங்களில் பாஜக - திமுக உறவில் விரிசல்கள் வந்திருந்தன. பாஜக கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் விலகியது, திமுக. இதைதொடர்ந்து அக்கூட்டணியில் இருந்த மதிமுக, பாமகவும் விலகின.



நாளை நமதே, நாற்பதும் நமதே

2004 ல் அதிமுக பாஜக மட்டுமே கூட்டணி அமைத்தன. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த எந்த கட்சியும் 2004 ல் இல்லை. ஆனால் பாஜக மட்டுமே வந்திருந்தது. 1998 ல் பாஜக ஆட்சி கவிழ காரணம், ஜெயலலிதா. 1999 ல் பாஜகவை எதிர்த்து நின்றார். ஆனால் 2004 ல் கூட்டணி அமைத்ததும், பிரதமராக இருத்த வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வேண்டுமென வாக்கு கேட்டார். பாஜகவிற்கு கோவை உள்ளிட்ட 6 தொகுதிகளை ஒதுக்கியது. அத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “நாளை நமதே, நாற்பதும் நமதே” என்ற முழக்கத்தை முன்வைத்தார். ஆனால் நாற்பதையும் இழந்தது அதிமுக, பாஜக கூட்டணி.



2001 தேர்தலில் தொகுதி பங்கீடு சிக்கலால் திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக, அதிமுக அரசின் பொடா சிறைவாசத்தினால் மீண்டும் இணைந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூப்பனார் மறைவை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியோடு இணைக்கப்பட்டது. 



தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற தனிக்கட்சி நடத்திய ப.சிதம்பரமும் திமுக கூட்டணியில் சேர்ந்தார். பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் திமுக கூட்டணியில் இணைந்து, அதிமுக - பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்தன. மக்கள் கூட்டணி என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய தேசிய லீக், ஜக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் 3 வது அணியாக களமிறங்கியது. 

பாஜக முன்வைத்த இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கம் தேர்தல் களத்தில் ஒளிரவில்லை. நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற அதிமுகவின் முழக்கமும் எடுபடவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது. ஒரு தொகுதியில் கூட அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகள் ஆதரவோடு ஆட்சியமைத்தது. ஆனால் சோனியகாந்தி பிரதமராக பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால், மன்மோகன்சிங் பிரதமராக பொறுப்பேற்றார். 



கோவையில் மீண்ட இந்திய கம்யூனிஸ்ட் 

திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்தது. அதில் கோயமுத்தூர் தொகுதியும் ஒன்று. நீண்ட இடைவெளிக்கு பின்னர், 1998 தேர்தலில் கோவையில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருந்தது. ஆதலால் வெற்றி பெறும் முனைப்போடு, மீண்டும் கோயமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டது. கோவையில் முன்பிருந்த கொதிப்பான மனநிலை மாறி அமைதி திரும்பியிருந்தது. அதனால் மண்ணின் மைந்தரான கே.சுப்பராயனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியும், பாஜக, அதிமுக மீதான அதிருப்தியும் கை கொடுத்தது.



கோவை குண்டு வெடிப்பு சம்பத்திற்கு பின் நடந்த 1998 மற்றும் 1999 தேர்தல்களில் பாஜக வென்றது. இரண்டு முறையும் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானர். 2004 தேர்தலில் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிட்டார், சி.பி.ராதாகிருஷ்ணன். அதிமுக வாக்கு வங்கியும், பாஜக சாதனைகளும் பலம் சேர்க்குமென எதிர்பார்க்கப்பட்டது. 



தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 5 இலட்சத்து 4 ஆயிரத்து 981 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3 இலட்சத்து 40 ஆயிஅரத்து 476 வாக்குகளும் பெற்றனர். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய, கே.சுப்பராயன் அபார வெற்றி பெற்றார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை தொகுதியை கைப்பற்றியது. இதன்மூலம் கோவையில் பாஜகவின் தொடர் வெற்றிகளுக்கு கம்யூனிஸ்ட்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.



தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மற்றும் வேட்பாளர்கள் மாறுவது வழக்கம். ஆனால் அடுத்து வந்த தேர்தலில் கோவை தொகுதியின் வரைபடமே மாறியிருந்தது.

தொடரும்…

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...