கோவையில் இருந்து தேர்வாகும் எம்.பியிடம் தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் என்ன..?

கோவை : ஜி.எஸ்.டி. குறைப்பு, சிறு, குறு தொழில்களுக்கு தனி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கோவையில் இருந்து தேர்வு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொழிற்சங்கத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.


கோவை : ஜி.எஸ்.டி. குறைப்பு, சிறு, குறு தொழில்களுக்கு தனி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கோவையில் இருந்து தேர்வு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொழிற்சங்கத்தினர் எதிர்பார்த்துள்ளனர். 

தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரான கோவையில் திறமைமிக்க தொழில்வல்லுனர்கள் இருந்து வருகின்றனர். பெரிய தொழில்நிறுவனங்கள் முதல் சிறிய தொழில்நிறுவனங்கள் வரை செயல்படும் வடதமிழகத்தின் தொழில்கூடாரமாக கோவை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. சுமார், 30,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில்துறை வளர்ச்சியடைவதால், கொங்கு மாவட்டங்கள் மட்டுமில்லாது, மாநிலமே முன்னேற்றம் அடையும் என தொழில் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.  

இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் மேம்படும் வகையில், கோவையில் தேர்வு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொழிற்சங்கத்தினர் ஒருசில கோரிக்கைகளை எதிர்பார்த்துள்ளனர். 

டி.ஏ.சி.டி.யின் தலைவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எங்களது நீண்டகால கோரிக்கையாக, அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பொதுவான தனி இடம் என்பதுதான். மற்றொரு முக்கிய கோரிக்கையாக, ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஜாப் ஆர்டர்களை பெரும் சிறு, குறு நிறுவனங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை செலுத்துவது மாபெரும் சுமையாகும்." என்றார்.

கொசிமாவின் தலைவர் சுருளிவேல் கூறியதாவது :- முதலில் ஜி.எஸ்.டி செலுத்தும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். அது மிகவும் சவாலானதாக உள்ளது, ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தால் சிறப்பானதாகும். மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனம் கோவையில் அமைய இருக்கிறது. இதனால், நமது பணிகளை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், ஏற்கனவே கோவையில் இருந்து ராணுவ உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய அளவிலான ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனம் நிறுவப்படும்போது, வேலை வாய்ப்ப்புகள் அதிகரிக்கும். இதன்மூலம் மாவட்டம் வளர்ச்சி பெரும், எனக் கூறினார். 



 

"சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு என தனி அமைச்சகம் அமைத்து, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். மேலும், வங்கிகளின் வட்டி விகிதங்கள் ஒருபுறம் கவலையளிக்கிறது. இது சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு உகந்ததல்ல. வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் 9 முதல் 12 சதவீதம் என்பது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகும். பல்வேறு நாடுகளில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே. எனவே, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க வேண்டும். இதன்மூலம், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடைய உதவிகரமாக இருக்கும்," என தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதி வலியுறுத்தினார். 

கொடிசியாவின் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது :- உண்மையில், இந்த பிராந்தியத்தில் உள்ள தொழில்நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கு உதாரணம்தான், மோப்பேரிபாளையத்தில் வரவிருக்கும் கொடிசியாவின் தொழில் பூங்கா. நமது தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்படும் பிரதிநிதி, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்முடன் கைகோர்த்து செயல்பட வேண்டும். நமது பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கும், அமைச்சகத்திற்கும் எடுத்து செல்ல வேண்டும். தற்போது, முக்கிய பிரச்சனையாகக் கோவை விமான நிலைய விரிவாக்கத்தை, நமது எம்.பி. வெற்றிகரமாக முடித்து தர வேண்டும், என தெரிவித்தார். 



 

சைமாவின் பொது செயலாளர் கே. செல்வராஜ் கூறியதாவது :- ஜி.எஸ்.டி.யினால் டெக்ஸ்டைல்ஸ் துறையினர் அதிக பலனடைகின்றனர். அதே வேளையில், கூடுதல் அதரவு இருப்பின், வேளாண்துறைக்கு இணையாக மிகப்பெரிய தொழில்சாலைகளால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களைக் காட்டிலும், கோவையில் மட்டும் 7.5 மில்லியன் டெக்ஸ்டைல்ஸ் துறையின் ஸ்பின்டில் யூனிட் இயங்கி வருகிறது. மேலும், திருப்பூர் மற்றும் கோவையில் மட்டும் 2 லட்சம் விசைத்தறி தொழில்சாலைகளும், 50,000-க்கும் மேற்பட்ட கைத்தறி தொழில்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தேவைப்படுகின்ற இயந்திர தேவைகளில் 80 சதவீதம் எல்.எம்.டபுள்யூ. நிறுவனமே நிவர்த்தி செய்கிறது. டெக்ஸ்டைல்ஸ் துறையில் சிறந்து விளங்கும் 3 முக்கிய நகரங்களில் கோவையும் ஒன்றாகும். அரசு எங்களுக்கு ஆதரவு அளிக்கும்பட்சத்தில், 2025-ம் ஆண்டிற்குள் 3 மடங்கு வளர்ச்சியடைய முடியும், என்றார். 



கோப்மாவின் தலைவர் கே. மணிராஜ் கூறுகையில், "ஜி.எஸ்.டி.யானது தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் தனிப்பட்ட வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. ஜி.எஸ்.டி.யால் கிட்டத்தட்ட 30 சதவீதம் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதம் என்பது ஆங்கிலேயர்கள் கூட கொண்டு வரவில்லை. வரி சீரமைப்பின் பெயரில் இந்த அரசாங்கம் ஆயிரக்கணக்கான மைக்ரோ மற்றும் சிறிய தொழிற்துறைகளை அழித்திருக்கிறது. ஜி.எஸ்.டி.யை முழுவதும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களுக்குத் தேவை. ஆனால், தற்போது இயலாத காரியமாகும். எனவே, நமது தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்படும் எம்.பி., ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார். 



Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...