பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய உணவு என்பதையும் தாண்டி, பால் என்பது முழு உணவாகிறது .. தண்ணீர் கூட அருந்த தேவை இல்லை எனும் அளவிற்கு பால் ஒரு அமுது ..



பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய உணவு என்பதையும் தாண்டி, பால் என்பது முழு உணவாகிறது .. தண்ணீர் கூட அருந்த தேவை இல்லை எனும் அளவிற்கு பால் ஒரு அமுது..

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலைப்பற்றி பல விதமான கருத்துக்கள் இருந்து கொண்டே வருகிறது... 

சில கருத்துக்கள் "பாட்டி சொன்னவை சரியாகத்தான் இருக்கும்" எனும் நம்பிக்கையில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன .. மற்றும் சில விஞ்ஞானத்தின் அடிப்படையில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.... 

நானும் ஒரு பெற்றோர் எனும் முறையிலும், பால் அணியில் ஒரு அங்கம் எனும் வகையிலும் எங்களது கருத்தை "குழந்தை பருவமும் பாலின் பங்கும் " எனும் இந்த கட்டுரையின் மூலம் பதிவு செய்கிறோம்.

பிறந்த குழந்தையும் பாலும்! 

புதிதாய் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர உகந்த உணவு வேறொன்றில்லை... எனினும், தாய் பால் இல்லாத சூழலில் மாற்று என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வி. புட்டிப்பால் (à®…) பவுடர் பால் என்பது தாய்ப்பாலுக்கு ஒரு சரியான மாற்று .. இது, தாய்ப்பாலை ஒத்த சத்துக்களோடும், எளிதில் செரிமாணமாகக்கூடியதுமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு வயது முழுமையடையும் வரையில், தாய்ப்பால் மற்றும் பவுடர் பால் மட்டுமே குழந்தைக்கு ஏற்ற உணவு.. 

சரி! இருப்பினும் ஏன் ஒருவயது முடியும் வரையில் பசும்பால் கொடுக்க கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்? பசும்பால்தானே இயற்கையானது? என்ற கேள்வி வரும்.

இந்தக் கேள்விக்குபதில் சொல்லும் முன், பசும்பாலில் மூலப்பொருட்கள் என்ன என தெரிந்து கொள்வோம்.. பாலில், நீர்ச்சத்து, கார்போஹைட்ரெட்ஸ், புரதம், கொழுப்பு மற்றும் இதர சத்த்துக்கள் உள்ளன…. 

தவிர முக்கியமான ஒன்று “லாக்டோஸ்” எனும் ஒரு வகையான சக்கரை. இதைசெரிமானம் செய்ய நமது குடல் “லாக்டேஸ்” எனும் நொதியை உற்பத்தி செய்கிறது… இந்த திறன் பச்சிளம் குழந்தைகளுக்கு சற்றே குறைவாக இருக்கலாம் என்பதால், ஒரு வயது வரை பசும்பால் கொடுக்க்காமல் இருப்பது நலம்….. 

இதற்கு இயற்கையே அளித்த மாற்று தான் தயிர், பன்னீர், வெண்ணெய் மற்றும் நெய் முதலிய பாலினது பல்வேறு பொருட்கள். இதில் லாக்டோஸ் புளிக்கப்பட்டு கரைக்கப்பட்டுவிடுகிறது. மேலும் பாலின் இந்த பொருட்களின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கிறது.. இதன் பிறசத்துக்களையும் முழுமையாக பெற முடிகிறது.. 

இந்த காரணத்தினால், ஒரு வயத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு கூட தயிர், மற்றும் நெய் சார்ந்த பால் பொருட்களை தாராளமாக கொடுக்கலாம்… 

மேலும், பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயமாக நாள் ஒன்றிற்கு இரண்டு கப் பால் அருந்துவது, சத்து பற்றாக்குறை வராமல்தடுக்கும்.. குறிப்பாக பாலின் கால்சியமானது அவர்களின் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை!!! 

உங்கள் குழந்தைக்கு பால் பிடிக்காமல் இருக்கலாம். பால் வாசம் பிடிக்காமல் இருக்கலாம். இது “லாக்டோஸ் சகிப்புத்தன்மை” அல்ல…. lactose intolerance என்பது ஒரு health condition . ஏற்கனவே கூறியது போல, நமது உடல் பாலின் லாக்டோஸ் ‘ஐ செரிக்கும் திறனை பொறுத்தது .. நமது குடல் “லாக்டேஸ்” (Lactase) எனும் நொதியை தேவையான அளவில் உற்பத்தி செய்யாத பட்சத்தில் அஜீரணம் , வாந்தி போன்ற கோளாறுகள் ஏற்பட கூடும்… 

பொதுவாக குழந்தைகளுக்கு இருக்கலாம். இருப்பினும் “லாக்டோஸ் சகிப்புத்தன்மை “ எந்த வயதிலும் ஏற்படலாம் .எந்தவயதிலும் சரியாக்கலாம்.

பால் ஒரு மருந்தா?

இயற்க்கை மருத்துவத்தில் பாலுக்கு ஒருபங்கு இருப்பது உண்மைதான்.. உதாரணமாக, மிளகுப் பால் குடித்து வறட்டு இருமலை விரட்டுவது நமது கலாச்சாரத்தில் கலந்த ஒன்று! 

அனால், பால் என்பது ஒரு மருந்தா என்று கேட்டால்.. இல்லை. பால் என்பது ஒரு முழுமையான உணவு மாற்று. அவ்வளவே! 

வளரும் குழந்தைக்கு தேவையான புரதம், கால்சியம், விட்டமின்ஸ் மற்றும் இதர தாதுக்களும் பாலில் நிரம்பியுள்ளன… இதனால் குழந்தைகளுக்கு பால் அவசிய உணவாகிறது.. பசும்பால் இயற்கையாகவே சுவை மிகுந்தது… சக்கரை கூட சேர்க்காமல் பசும்பால் அருந்தலாம்! 

அதேவேளையில், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எனும் பழமொழி புகட்டியது போல, பாலையும் அளவோடு தான் அருந்த வேண்டும்.. மிகுதியாக சேர்த்தால் ஜீரணக்கோளாறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் பொருந்தும்!! 

பாக்கெட் பால்?!

பாலில் இருக்கும் ஒரு சில பாக்டீரியா உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் என்பதால் pasteuriation எனும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில், பால் உயர் வெப்ப நிலைக்கு உட்படுத்தப்பட்டு பின் விரைவாக குளிரூட்டப்படுகிறது. இதானால் அணைத்து வகையான உயிரிகளும் அழியும் என்பதை தாண்டி, பாலின் நன்மை செய்ய கூடிய பாக்டீரியாக்களும் அழிந்து விடும் என்பதே உண்மை. மேலும் இந்த முறையில் பாலின் மூலக்கூறுகளின் பண்பு மாறுகிறது. இது நமக்கு தீங்கு விளைவிக்கிறது! 

மேலும் வணிக அளவில் செய்யும் மற்றொரு முறை, homogenization.. இதில் பால் உயர் அழுத்தம் மற்றும் வெப்பத்துக்கு உட்படுத்தப்பட்டு கொழுப்பு உடைக்கப்பட்டு பாலில் சமமாக கரைக்கப்படுகிறது. இந்த முறைகளுக்கு உள்ளாகும் பால் தன்னிலை இழந்து சீரழிகிறது. முக்கியமாக, கொழுப்பு உடைக்கப்படுவதால், நமது ஜீரணமண்டலம், அளவுக்கதிகமான கொழுப்பை ஏற்றுக்கொள்கிறது! அப்படியான கொழுப்பும் நல்ல கொழுப்பா என்றால் இல்லை! பாலின் இயற்கை கொழுப்பை நீக்கிவிட்டு, செயற்கை கொழுப்பு புகுத்தப்படுகிறது! இதனால் நேரும் விளைவுகளையும், இதுபோல் நிகழும் மேலும் பல கலப்படங்களையும் விளக்க இன்னொரு கட்டுரை எழுத வேண்டி வரும்…

இப்படியான முறைகள் நமக்கு ஏன் தேவை? குறைவே நிறைவு அன்றோ? சுருக்க காய்ச்சிய பாலே போதும் அன்றோ?

எனவே, இயற்கையாக, ஆரோக்கியமான பசுவினிடமிருந்து கலப்படமின்றி கிடைக்கும் பாலை, சூடேற்றி, கொதிக்க வைத்து, அதை குடிப்பதே நமக்கு போதுமானது… 

ஆறிய பாலின் மேலே இயற்கையாக மிதக்கும் பாலின் கொழுப்பு தான் பாலாடை.. இதை சேமித்து, தயிராக்கி, கடைந்து மோர் மற்றும் வெண்ணெய் எடுத்து, அந்த வெண்ணையில் இருந்து கிடைக்கும் நெய் போன்ற ஒரு அமிர்தம் வேறு எதுவும் இல்லை… 

ஆக, இக்கட்டுரையின் சுருக்கமானது,

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு உணவோடு, தாய்ப்பால் மட்டுமே போதுமானது. மாற்றாக, குழந்தைகளுக்கான பவுடர்பால் தரலாம். 

ஒருவயது நிறைவானதும், பசும்பால்தரலாம். 

பசும்பால், உங்களுக்கு தெரிந்த பண்ணையிலிருந்து, சுத்தமாக, கறந்த சில மணி நேரங்களில் காய்த்து அருந்தவும்! 

http://www.fao.org/fileadmin/user_upload/newsroom/docs/Milk%20and%20Dairy%20Q&A.pdf

https://www.babycenter.com/0_cows-milk-when-and-how-to-introduce-it_1334703.bc

https://www.aaaai.org/conditions-and-treatments/conditions-dictionary/lactose-intolerance

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...