குடிநீர் விநியோகம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாறுதல் குறித்த ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை, சித்தாபுதூர் மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம், சீராக குடிநீர் விநியோகம் மற்றும் திறந்தவெளி கழித்தலற்ற மாவட்டமாக மாறுதல் தொடர்பான பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 

கோவை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போய் உள்ளதால் மாவட்டம் முழுவதிலும் குடிநீர் தேவைகளும், மற்ற தண்ணீர் பற்றாக்குறையும் தலைதூக்கும் நிலையில் உள்ளது. ஆகவே, அனைத்து ஊராட்சி அலுவலர்களும், சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுவது மிகவும் அவசியமாகும். 

குடிநீர் பணிகளுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரின் அறிவுறையின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கல் பணிகள் தொடர்பாக உரிய அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுவதுடன் குடிநீர் வழங்கல் தொடர்பாக பொதுமக்களிடையே புகார்கள் எழாத வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றிட வேண்டும். 

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1077 என்ற கட்டணிமில்லா தொலைபேசி எண்கொண்ட கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டதுடன் அந்தந்த பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொண்டும் குடிநீர் வழங்கல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளன. 

கோவை மாவட்டத்தை பொருத்த வரை 9-குடிநீர் திட்டப்பணிகளில் சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் முற்றிலும் குறைந்து விட்டதால் ஆழியார் மற்றும் பவானி ஆற்றில் பெறப்படும் தண்ணீர் மட்டுமே வைத்து மக்களின் தேவைக்கு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 

இதுபோன்ற நிலையில் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அதே போல் ஊராட்சி செயலர் உள்ளூரிலே வசிப்பதால் அங்குள்ள பிரச்சனை என்ன என்பது நன்றாக தெரிய வரும். 

அதுபோன்ற நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று பொதுமக்களின் பிரச்சனையை தீர்த்திட வழிவகை செய்திட வேண்டும். அதேபோல் தங்கள் பகுதிகளில் ஊராட்சி செயலர் குடிநீர் விநியோக பணியாளர் மூலம் மேல்நிலைத் தொட்டிகளை முறையாக பராமரிப்பதிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திறந்தவெளி மலம்கழித்தலற்ற முழுசுகாதாரம் பெற்ற மாவட்டமாக மாற்றிட பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அதில் முதன்மை மாவட்டமாக கோவை மாவட்டம் திகழ அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடவும் மேலும் இதுவரை 80 சதவிகித ஊராட்சிகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு திறந்தவெளி கழித்தழற்ற ஊராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊராட்சிகளிலும் தனிநபர் கழிப்பறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதுதொடர்பாக பொதுமக்கள் மத்தியிலும் சிறப்பான வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊராட்சி அலுவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் .நஹரிஹரன் பேசினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, ஊராட்சி செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், குடிநீர் விநியோகிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...