கோவை மாநகர காவல் கட்டுப்பாடு அறைக்கு 1300 முறை அழைத்து தொல்லை கொடுத்த இருவர் கைது


அவசர நேரத்தில் பொதுமக்கள் போலீசாரை சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்ட காவல் துறை ஆணையர் அலுவலகத்திலும் காவல் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த கட்டுபாட்டு அறைக்கு சில மர்ம நபர்கள் தொடர்ந்து தவறான தகவல்களை கொடுத்தும், தொல்லை கொடுத்தும் வந்தனர். அவ்வாறாக போலியான அழைப்புகள் குறித்து கணக்கெடுத்த போது, ஒரே செல்போனை பயன்படுத்தி இருவர் ஆயிரத்து 300 முறைக்கு மேல் அழைத்தது தெரியவந்தது. தொடர்ந்து, கோவை சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, போலி அழைப்புகள் கொடுத்தது வேடபட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (41) என்பவரும், ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் பொழுது போக்கிற்காக காவல் கட்டுப்பாடு அறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு அழைத்து தவறான தகவல்கள் கொடுத்ததும், இவர்களது அழைப்பை பெண் காவலர்கள் எடுக்கும் போது ஆபாசமாக பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.

இவர்கள் இருவரிடம் இருந்து மட்டும் ஆயிரத்து 390 அழைப்புகள் வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, கோவை மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ் கூறியதாவது:-

'கோவை மாநகரில் செயல்படும் கட்டுப்பாடு அறையில் ஆறு தொலைபேசி இணைப்புகள் உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் அழைப்புகள் கட்டுப்பாட்டு அறைக்கு வருகிறது. அதில், 10 முதல் 15  அழைப்புகளே உண்மையானவையாக இருக்கிறது. மற்ற அழைப்புகள் போலியாகவும், காலம் தாழ்த்தியும் கிடைப்பவை.

காவல் கட்டுப்பாடு அறைக்கு வரும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படுகின்றன. அவை போலி அழைப்புகள் என்று தெரிய வரும் நேரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.  மேலும், அதி நவீன மென்பொருட்கள் உபயோகித்து பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதில் அளிக்கப்பட்டு வருகிறது.  இது போல  போலி அழைப்புகள் விடுப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்'.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...