மது மற்றும் கள்ளச்சாராயம் குறித்து கோவையில் விழிப்புணர்வு பேரணி



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.02.2017) தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட கலால் துறை மூலம் மதுப்பழக்கம் மற்றும் கள்ளச்சாரயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி காவல் ஆணையர் அலுவலகம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது. 

இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கள்ளச்சாராய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு வாசகங்களை கூறியபடியும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் சென்றனர். 

முன்னதாக கிராமிய கலைஞர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பின்னர், வ.உ.சி மைதானத்தில் மாணவ மாணவியர்களுக்கு மதுவினால் உடலில் உண்டாகும் தீமைகள் குறித்தும் மருத்துவர்களால் விளக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மருத்துவ முகாம்களும் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் (கலால்) து.வெங்கடேசன், மாவட்டட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) நூர்முகம்மது, கோட்ட கலால் அலுவலர்கள் ஜெயசித்ரா, ருக்மணி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...