பொதுத்துறை மருந்து நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை  மருந்து நிறுவனங்கள் பாதுகாப்பு, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

நோய் தீர்க்கும் மருந்துகளின் விலையேற்றத்தால்  பொதுமக்கள் பயன்படுத்தும் மருந்து பொருட்களின் விலை  பன்மடங்காக உயர்ந்துள்ளதை கட்டுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருள் மற்றும் சேவை வரியை மருந்துகள் மீது விதிக்கக்கூடாது,அன்னிய முதலீட்டை கட்டுபடுத்துதல், ஆன் லைன் மருத்துவ விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜாகீர் ஹுசேன் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சாமானிய மக்களின் நோய் போக்கும் வழிவகை செய்யாமல் கார்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், மருத்துவ துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு என்பது மருத்துவ துறையில் அடைந்த சுயசார்பை பாதித்து பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் வாழ வழி செய்துவிடும் என்பதால் மக்களுக்கு சாதகமான மருந்து கொள்கை அளிக்க வேண்டும் என கூறினார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...