சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் ரயில்களில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் உத்தரவின் பேரில் சேலம் கோட்டத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயில், காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில், பிலாஸ்பூர் எர்ணாகுளம் விரைவு ரயில், திருவனந்தபுரம் கோரக்பூர் விரைவு ரயில், ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் சேலம் கோட்ட வணிக மேலாளர் கே.மது தலைமையில் 20 பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் 3 ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கொண்ட குழு திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டது.

இதில் 331 பேர் பயணச்சீட்டு இல்லாமலும், 16 பேர் கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை எடுத்துச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 1,40,730 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

1989-ம் ஆண்டு இந்திய ரயில்வே சட்டம் 138-வது பிரிவின் படி தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சரக்குகளை தங்களுடன் எடுத்துச் செல்வதும், தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அவர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...