முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கு எதிரானது- மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கும் அறநெறிகளுக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி செய்தியாளர்களிடயே பேட்டியளித்தார்.

அப்போது, நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக-வின் முன்னாள், இன்னாள் பொதுச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆட்சி நடைபெறுவதாக கூறுவதே அவர்கள் ஆளத்தகுதியில்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

இவர்கள் தலைமையில் ஆட்சி நடைபெறாது என்று எடப்பாடி அறிவித்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தற்போதைய முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

கோவையில் ஆதிவாசிகளின் நிலங்கள் அபகரிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, இயற்கை வள சுரண்டல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் தலைமையில் நடைபெறும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவது ஆரோக்கியமான முன்னுதாரனம் அல்ல. 

எனவே, ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது. அவ்வாறு பிரதமர் வருவது உறுதியானால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் சார்பில் வருகிற 22 அல்லது 23ம் தேதிகளில் பிரதமரை கண்டித்து கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்.

இதே போல் நாட்டில் அச்சு ஊடக உரிமையாளர்கள் செய்தியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளால் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என குமாரசாமி  கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...