கோவைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா வரும் 24ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக பாரதபிரதமர் நரேந்திர மோடி கோவை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். 

அப்போது, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாரும், பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி, விமான நிலைய இயக்குநர் பிரகாஷ் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...