ஆதியோகி சிலை திறப்பு விழாவில் மோடி பங்கேற்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் கைது.

கோவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி அருகே மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையினை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதியன்று கோவைக்கு வருகை தரவுள்ளார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த சிலையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறும் 100 சதுர அடிக்கு மட்டும் உள்ளூர் பஞ்சாயத்திடம் அனுமதி பெற்றுக்கொண்டு, 4 லட்சம் சதுர அடிக்கு விதிமுறைகளை மீறி ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது சரியான முன்னுதாரனமாக இருக்காது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...