பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரதம்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. தேக்குவட்டை பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக சிவானந்த காலணி பகுதியில் பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுமெனவும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தமிழகம் பாலைவனமாகும் அபாயம் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கேரள அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகள் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். 

Newsletter

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...