கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் தலையில் கல்லைப் போட்டு ஒருவர் கொலை

கோவை போத்தனூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலையில் கல்லைப்போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனோஜ்மேனன் என்ற ஓட்டுநரை கைது செய்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்மேனன். கார் ஓட்டுநரான இவர் இரவு நேரங்களில் தனது வீட்டின் மாடியில் நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கம்.

இவர் நேற்று இரவு கட்டிட தொழிலாளியான சித்தேஸ்வரன் என்பவரை அழைத்துக்கொண்டு வந்து வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது மனோஜ்மேனன் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சித்தேஸ்வரன் தலையில் போட்டத்தில் சித்தேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய மனோஜ்மேனன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் சம்பவத்தை சொல்லி சரணடைத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி நேரில் பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை தொடர்பாக போத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...