மாட்டுக்கான போராட்டம் மண்ணுக்காகவும் தொடர்கிறது: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோவையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த இளைஞர்கள் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு வேண்டி ஒட்டுமொத்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் வெற்றியும் கண்டனர். இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நெடுவாசல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெடுவாசல் பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக தற்போது இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, இளைஞர்களின் இந்த போராட்டம் அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. 



இன்று காலை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மாட்டுக்காக வந்த நாங்கள், தமிழகத்தின் மண்ணை காக்கவும் வருவோம் என்றும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...