ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு கோவையில் விண்ணப்பங்கள் விநியோகம் 6ம் தேதி துவக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்- 2 முறையே 2017 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரால் வரும் மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த விண்ணப்பங்களை பெற கட்டணமாக ரூ.5 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.

இதுகுறித்தான மேலும் தகவலுக்கும் விற்பனை மையங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளவும், மாவட்ட வாரியான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கோவை மாவட்டத்தில், முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள வின்சென்ட் சாலையில் செயல்பட்டு வரும் நல்லாயன் உயர்நிலைப் பள்ளி மற்றும் பாலக்காடு சாலையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் வரும் 6ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர திரும்பப் பெறப்படும்.

விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...