சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால கோவிலில் பசுவின் உருவ பொம்மை வைத்து விவசாயிகள் சிறப்பு வழிபாடு

சலகெருது ஆட்டம், உருமி இசையுடன் தேவாராட்டம் ஆடி விவசாயிகள் சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர். இதில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்ட மால கோவிலில் காணும் பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள் தங்களது கால்நடைகள் நீண்ட காலமாக நலமுடன் வாழ பசு மாடு உருவ பொம்மை வைத்து நேர்த்திக்கடன் செய்து விவசாயிகள் சிறப்பு வழிபாடு செய்தனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின் படி பல ஆண்டுகளாக கால்நடைகள் நலமாய் வாழ உருவ பொம்மை வைத்து வழிபாடு செய்தால் கால்நடைகள் நீடுழி வாழ இறைவன் கை கொடுப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.



மேலும் இதற்கிடையில் பாரம்பரியமான சலகெருது ஆட்டம், உருமி இசையுடன் தேவாராட்டம் ஆடி சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.



கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...