உக்கடத்தில் இந்தியாவின் இறையாண்மையும், இந்தியாவின் ஜனநாயகமும் இன்றைய நிலை எனும் தலைப்பில் கருத்தரங்கம்

இந்தியாவின் இறையாண்மைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அரசு, ஒரே தலைவர் என்ற கொள்கையை நம் மீது திணிக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று கருத்தரங்கில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசினர்.


கோவை: கோவையில் சமூக நீதி கூட்டமைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பாக இந்திய இறையாண்மையும், இந்திய ஜனநாயகமும் இன்றைய நிலை எனும் கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா கூட்டமைப்பு, சமூக நீதி கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து, இந்தியாவின் இறையாண்மையும், இந்தியாவின் ஜனநாயகமும் இன்றைய நிலை எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.



கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள தாஜ் டவர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமூக நீதி கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் டாக்டர் ஜி.முகம்மது ரபீக் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஆறுமுகம், மாநில செயல் தலைவர் இராம.வெங்கடேசன், பொருளாளர் அருள்தாஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பர்வேஷ், மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில், தொழிற்சங்க கூட்டமைப்பின் பொது செயலாளர் கவிஞர். குரு நாகலிங்கம், திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பு செயலாளர் கா.சு.நாகராசன்ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். இந்தியாவின் இறையாண்மைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அரசு, ஒரே தலைவர் என்ற கொள்கையை நம் மீது திணிக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று பேசினர். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. அத்தகைய உணர்வின்றி மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

கருத்தரங்கில் தமிழக அரசு தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் சுய கூட்டாட்சி கொள்கை மிகப்பெரிய தாக்குதலில் இருப்பதாக கூறிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை, நாட்டில் அனைவருக்கும் சம உரிமை என்பதே கூட்டாட்சித் தத்துவம் எனவும், உலகிலேயே அதிக ஜாதி, மத, இன வேறுபாடுகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், ஒற்றுமையில் இந்தியா போல் எந்த நாடும் இல்லை என தெரிவித்தார்.

அதற்கு இந்திய நாட்டின் அரசியலமைப்பும், சட்டங்களுமே காரணம் என சுட்டிகாட்டினார். தொடர்ந்து நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து பதிலளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில், கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை அவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா, பாலகிருஷ்ணன், ராக்கி கிருஷ்ணன், அழகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...